Breaking News :

Friday, April 04
.

நாச்சியார்கோயில் மார்கழி கருடசேவை!


நாச்சியார் கோயில் – கல் கருடன் சேவை மார்கழி ப்ரம்மோத்சவத்தின்போது நடைபெறும்  வியாழன், சனிக்கிழமை இவருக்கு உகந்த நாட்கள். அனைத்துவித விஷ ஜந்துக்களிடம் இருந்து கருடாழ்வார் காத்தருள்வார். கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, "தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டுன் என்று வேண்டினார். அதற்கு மேதாவி முனிவர் மூன்று நிபந்தணைகள் விதித்தார். ( இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தணை போட்டனர்)

1. தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும்.

2. பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும்.

3. இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும்.
நாச்சியார் கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லித் தாயாருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றபின் . தெய்வத் திருமணத்துக்கு பெரிதும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு சிறப்பு இடம் வழங்கப்பட்டு, அவருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ தினங்களில் இத்தலத்தில் கல் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கல் கருட வாகனம், இத்தலம் தவிர வேறு எங்கும் காணக் கிடைக்காது.

சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை தூக்கிச் செல்ல முதலில் 4 பேர் மட்டுமே இருப்பர். பின்னர், கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்க நேரிடும். அதேபோல் கோயில் வாசலில் இருந்து 128 நபர்கள் தொடங்கி, படிப்படியாக குறைந்து நிறைவாக, 4 பேர் மட்டுமே அவரை சந்நிதியில் அமர்த்துவர்.

இத்தலத்தில் தாயாருக்கே முதல் மரியாதை என்பதால், அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி தாயார் முன்னர் செல்வார். கருட வாகனம் அன்னப்பறவையின் பின்னர் செல்ல வேண்டியுள்ளதால், அதன் எடை கூடிக்கொண்டே போகும். அன்னப்பறவையின் மெது நடைக்கு ஈடுகொடுத்து, கருடன் வழக்கம்போல் வேகமாக பறந்து செல்லாமல் மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது.

கல் கருடனின் 9 நாகங்கள் ஆபரணங்களாக அலங்கரிக்கின்றன. கல் கருடனின் சிறப்பு காரணமாக, இங்கு நடைபெறும் கருட சேவை சிறப்பானதாக அறியப்படுகிறது. பெரியாழ்வாரின் சொரூபமாக கருடாழ்வார் போற்றப்படுகிறார். அதனால் கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழை இலையில் கலந்து அவரது திருமேனி மீது சாற்றினால், பக்தர்கள் அனைத்து வித நற்பலன்களைப் பெறுவார்கள்.

ஆடி மாத ஸ்வாதி நட்சத்திரத்தில் கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி (சுக்ல பட்ச பஞ்சமி) தினத்தில் வணங்குவதால் புத்திரப் பேறு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். வியாழன், சனிக்கிழமை இவருக்கு உகந்த நாட்கள். அனைத்துவித விஷ ஜந்துக்களிடம் இருந்து கருடாழ்வார் காத்தருள்வார்.

கருட வாகனனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்ற வியூக மூர்த்திகளும் கர்ப்பகிரகத்தில் சேவை சாதிக்கின்றனர். 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் இங்கு தரிசிக்கலாம், பிரம்மாவும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

பெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசு தேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி.

பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், தாயார் அன்ன வாகனத்திலும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.

ஓம் நமோ நாராயணாய

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.