சிவன் கோவிலில், நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.
இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
சிவ என்னும் திருநாமத்தையும் அந்த ஈசனின் மகிமையையும் இந்தப் பிரபஞ்சத்துக்குத் தாங்கி வருபவராக விளங்குபவர் நந்திதேவர்.
எனவே தான்,பிரதோஷ நாளில் நந்தியை சிவனாகவே கண்டு வணங்க வேண்டும்.
பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி,பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.
எனவே,பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும்,நினைவாற்றல் பெருகும்,தோஷங்கள் நீங்குகிறது.
எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து,வில்வ இலை,சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
சிவன் வீற்றிருக்கும் வாகனம் சிவனுடைய பொருள் ஆகும்.
எனவே,தர்ம தேவதையின் ரிஷப வாகனமும் சிவபொருளாகி விடுகிறது. அதனால் அதற்கு அழிவு என்பது கிடையாது.
உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு.ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை.
இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.
ௐ நந்திகேஸ்வர போற்றி....
மகேஷ்வரன் அருளோடு ....
ரமணர் திருவடிகளே
சரணம் சரணம் ...