Breaking News :

Saturday, December 21
.

நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை!


நவராத்திரி ஒன்பது விதமான இரவுகளில் அம்பிகையின் ஒன்பது விதமான ஆற்றல்களை, வடிவங்களை வீட்டிற்கு அழைத்து வழிபடுவதாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை மனம் உருகி வேண்டி வழிபட்டால், நாம் வேண்டும் வரங்களை அம்பிகை தந்து அருள் செய்வாள் என்பது நம்பிக்கை.

நவராத்திரியின் 2ம் நாள் என்பது வாழ்வில் இருக்கும் தடைகளை போக்கிக் கொள்ள உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை தரும் நாளாகும். இந்த நாளுக்கு என்ன சிறப்பு உண்டு, 2ம் நாளில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும், என்ன நைவேத்தியம் படைத்து, அம்பிகையின் எந்த வடிவத்தை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நவராத்திரி 2ம் நாள் :

நவராத்திரியின் இரண்டாம் என்பது அம்பிகை, அசுரனை வதம் செய்வதற்காக கடுமையான தவத்தை மேற்கொண்ட நாளாகும். கிட்டதட்ட 1000 ஆண்டுகள் வரை அம்பிகை, உணவு ஏதும் சாப்பிடாமல்  கடும் தவம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த சமயத்தில் தான் அம்பிகை, தனக்குள் சிவனின் சக்தியும் இணைந்து இருக்க வேண்டும் என்றும், சிவ பெருமானே தன்னுடைய கணவனாக வர வேண்டும் என்றும் வேண்டி, பல சக்தி வாய்ந்த வரங்களை பெற்ற நாளாக சொல்லப்படுகிறது.

நவராத்திரி 2ம் நாளில் செய்ய வேண்டியவை :

இந்த ஆண்டு நவராத்திரியின் இரண்டாம் நாள் அக்டோபர் 04ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளுக்கு மற்றொரு முக்கியமான சிறப்பு உண்டு. அதாவது இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு அன்று நோன்பு வைத்து, தாலி சரடு மாற்றிக் கொள்ள முடியாமல் போனவர்கள், அதே போல் ஆடிப் பெருக்கு அன்று தாலிச்சரடு மாற்றிக் கொள்ள முடியாமல் போனவர்கள், இந்த நாளில் வரலட்சுமி நோன்பிற்கு கடைபிடிப்பது போல், நோன்பு கடைபிடித்து, தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். நவராத்திரியில் மற்றொரு வெள்ளிக்கிழமை அக்டோபர் 11ம் தேதி வருகிறது. ஆனால் அந்த நாளில் சரஸ்வதி பூஜை வருவதால், அப்போது நோம்பு கடைபிடிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அக்டோபர் 4ம் தேதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவராத்திரி 2ம் நாள் வழிபாடு :

நவராத்திரியின் இரண்டாம் நாளில் அம்பிகையின் கிரியா சக்தியை வழிபட வேண்டும். கிரியா சக்தி என்பது படைப்பின் ஆற்றலாகும். முருகப் பெருமானுடன் இருக்கும் வள்ளி அம்மை இச்சா சக்தியின் mவடிவமாகவும், தெய்வாணை அம்மை கிரியா சக்தியாகவும், ஞான சக்தி முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேலாகவும் சொல்லப்படுகிறது. இச்சா சக்தி, ஆசைகளை குறிப்பது. கிரியா சக்தி என்பது நமக்கு எவ்வளவு ஆசைகள் இருந்தாலும் அந்த ஆசைகளை அடைவதற்கான வழிகளை உருவாக்கி, அதற்காக உழைக்கும் ஆற்றல்களை தரக் கூடியது கிரியா சக்தி. நம்முடைய ஆசைகளை அடைவதற்கான தடைகளை நீக்கும் வல்லமை பெறுவதற்காக கிரியா சக்தியை வழிபட வேண்டும்.

நவராத்திரி இரண்டாம் நாள் :

அம்பிகையின் பெயர் - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
கோலம் - கட்டம் வகை கோலம்
மலர் - முல்லை
இலை - மருவு
நைவேத்தியம் - புளி சாதம்
சுண்டல் - வேர்கடலை
பழம் - மாம்பழம்
நிறம் - மஞ்சள்
ராகம் - கல்யாணி

நவதுர்க்கை வழிபாடு 2ம் நாள்:

துர்க்கையின் வடிவம் - பிரம்மச்சாரினி
நிறம் - பச்சை
பழங்கள் - பழ வகைகள், வாழைப்பழம்
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
சொல்ல வேண்டிய மந்திரம் : ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம், அபிராமி அந்தாதி, துர்காஷ்டகம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.