Breaking News :

Friday, April 04
.

பாவ நிவர்த்தி கொடுக்கும் சபலா ஏகாதசி!


பாவ நிவர்த்தி செய்து பெரும் புகழை கொடுக்கும் சபலா ஏகாதசி.

 

இந்த சபலா ஏகாதசி,தை மாத ( ஜனவரி 25) தேய்பிறையில் தோன்றுகிறது.  இந்த ஏகாதசி யின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புரா ணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாரா ஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாட லில் விவரிக்கப்பட்டுள்ளது. 

 

மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார்.  "கிருஷ்ணா, தை மாத தேய்பிறையில் தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்.." 

 

பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். 

"பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைக ளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களி ல் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, ஆறுகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவ ரோ அவ்வாறே அனைத்து விரதங்க ளிலும் ஏகாதசி விரதம் மிகசிறந்தது. மன்னர் களில் சிறந்தோனே யாரொருவர் ஏகாதசியை அனுஷ்டிக்கிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர்..." 

 

"ஐந்தாயிரம் ஆண்டுகள் தவம் மேற்கொள்வ தால் அடையும் புண்ணிய பலனை ஒருவர் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலாயே எளிதில் அடைவார்..' 

 

"முன்பு ஒரு காலத்தில் மஹிஸ்மதா என்ற ஒரு புகழ் பெற்ற மன்னர் சம்பவதி என்ற நகரில் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர் அவர்களில் மூத்த மகனான லும்ப கா பெரும்பாவியாக இருந்தான். அவன் அந்த ணர்களையும், வைணவர்களையும், தேவர்க ளையும் நிந்தித்துக் கொண்டிருந்தான்.." 

 

"அவன் சூதாட்டத்திலும் விபச்சாரத்திலும் அதிக அளவில் ஈடுபட்டிருந்தான். அதனால் தன் தந்தையான மஹிஸ்மதா மன்னர் அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினார்..."  

 

"வெளியே ற்றப்பட்ட லும்பகா காட்டில் வாழ்ந் தான். இரவு நேரங்களில் தன் தந்தையின் நாட்டு பிரஜைகளிடம் செல்வத்தை அபகரிக்க துவங்கினான். அவன் திருடுவதில் ஈடுபட்டிரு ப்பினும் தங்கள் மன்னனின் மகன் என்பதால் அந்நாட்டுமக்கள் அவனை தண்டிக்கவில்லை. லும்பகா பச்சையான இறைச்சி மற்றும் பழங் களை உண்டு தன் வாழ்க்கையை கழித்தான்."

 

"அக்காட்டில் தேவர்களுக்கு ஈடாக வணங்கத்த க்க ஒருஆலமரம் இருந்தது. லும்பகா சில நாட் கள் அம்மரத்தடியில் வாழ்ந்தான்..."

 

"லும்பகா இவ்வாறுவாழ்ந்து கொண்டிருக்கை யில் தற்செயலாக இந்த சபலா ஏகாதசி நிகழ் ந்தது. லும்பகா மெலிந்து மிகவும் சோர்வடை ந்தான். ஏகாதசியின் முன்தினத்தன்று உணர் விழந்தான். ஏகாதசியன்று நடுப்பகலில் மீண் டும் உணர்வு பெற்றான். மிகுந்த பசியால் பாதிக்க ப்பட்டு சோர்வடைந்ததால், அன்றைய தினம் லும்பகாவால் எந்த ஒரு விலங்கையும் கொல்லமுடியவில்லை. அதனால் சில பழங்க ளை சேகரித்து அவற்றை பகவான் விஷ்ணு விற்கு சமர்ப்பித்தான். அந்நேரம் சூரியனும் மறைந்தது லும்பகா அன்று இரவு முழுவதும் விழித்திருந்தான்..."

 

"உண்ணாவிரதம் இருந்து, இரவு விழித்திருந் த தால் லும்பகா தன்னையறியாமலே சபலா ஏகாதசியை அனுஷ்டித்தான். லும்பகாவின் இந்த ஏகாதசி விரதத்தை பகவான் மதுசூதன ர் ஏற்றுக்கொண்டார். இந்த ஏகாதசியை அனுஷ் டித்ததன் விளைவாக லும்பகா ஒரு செல்வம் மிக்க நாட்டைப் பெற்றார.."

 

மறுநாள் காலையில் ஒரு தெய்வீகக் குதிரை யும் லும்பகாவின் முன் தோன்றியது. அவ்வே ளையில் வானத்திலிருந்து ஒரு ஓசை வந்தது. "இளவரசே, பகவான் மதுசூதனரின் கருணை யாலும், சபலா ஏகாதசியை அனுஷ்டித்ததன் பலனாகவும் நீ ஒரு இராஜ்ஜியத்தைப் பெறு வாய். நீ எந்தவொரு சிரமுமின்றி அதனை ஆள்வாய். உன் தந்தையிடம் திரும்பி சென்று இராஜ்ஜியத்தை அனுபவிப்பாயாக.. " 

 

இந்த அறிவுரைக் கேற்ப லும்பகா தன் தந்தை யிடம் திரும்பிச் சென்று நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அதன் பிறகு லும்பகா அழகிய மனைவியையும் நல்ல மகன் களையும் பெற்றார். 

 

இவ்வாறாக லும்பகா மகிழ்ச்சியுடன் நாட்டை ஆண்டு வந்தார். சபலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் ஒருவர் இப்பிறவியில் புகழ் அடைந்து, அடுத்த பிறவி யில் முக்தி அடைவா ர். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் அஸ்வமேத யாகத்தி ன் பலனை அடைவார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.