Breaking News :

Sunday, February 23
.

பெருமாள் கோயில்களில் ஹஸ்தம் என்பது?


பெருமாள் கோயில்களில்  தம் திருக்கரங்களை வைத்துக்கொண்டு இருப்பார்கள். இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர்.  பலவகை_ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில,

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்

1.  அபய_ஹஸ்தம்
பெருமாள் தன வலது திருக்கரத்தின்  விரல்களை மேல் நோக்கி வைத்து இருப்பார். இதற்கு பொருள் "அஞ்சேல்! பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன்" என்பதாகும். இது பல கோயில்களில் காணப்படும் ஹஸ்தம். திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் அபய ஹஸ்தம் வைத்துள்ளார்.

2. வரத_ஹஸ்தம்
பெருமாள் தன வலது திருக்கரத்தின்  விரல்களை தன் திருவடியை காட்டி வைத்திருப்பார்.  இதன் பொருள், "தன் திருவடியை சரணம் என்று அடைந்தவருக்கு, சரணாகதி தருவேன்" என்பதாகும். திருப்பதி மூலவர், வேங்கடநாதன் வரத ஹஸ்தம் வைத்துள்ளார்.

3. ஆஹ்வானஹஸ்தம்
பெருமாள் தன் வலது அல்லது இடது  திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார். இதன் பொருள், "அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷ்கிறேன்"  என்பதாகும்.

திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கர் உற்சவர் ப்ரஹலாத வரதன் ஆஹ்வான ஹஸ்தம் வைத்துள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.