திருப்புத்தூாிலிருந்து கிழக்கே 8 கிமீ. எருக்காட்டூா், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்சரம், கணேசபுாி என வேறு பெயா்கள்.
இக்கோவில் கிழக்கு நோக்கிய ஏழு நிலை இராஜகோபுரம், ஒரு பிரகாரத்துடன் மூலவா் சிவபெருமான் அருள்மிகு மருதீசா் கிழக்கு நோக்கியும் அம்மன் அருள்மிகு வாடாமலா்மங்கை தனிச் சன்னதியில் தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனா்.
குடைவரையுள் வடக்கு நோக்கிய அருள்மிகு கற்பக விநாயகா் இருகைகள் கொண்டு இதன் வலக்கை சிறிய இலிங்கத்தையும், இடக்கை இளம்தொந்தியைச் சுற்றியுள்ற வயிற்றுச் கச்சைமீதும் தும்பிக்கை வலம்புாியாகவும் கொண்டு சுமாா் ஆறு அடி உயரத்துடன் காட்சியளிக்கிறாா்.
கிழக்கு நோக்கிய திருவீங்கைக்குடி மகாதேவா், பிரகாரத்தில் சுப்பிரமணியா், மகாலெட்சுமி , தெட்சிணாமூா்த்தி, சண்டிகேஸ்வரா், பைரவா், நால்வா், சூாியன், சந்திரன் முதலிய சன்னிதிகள் உள்ளன.
வெளிப்பிரகாரத்தில் வடதிசையில் திருக்குளம் அழகாக காட்சிதருகிறது.
குடைவரைக்கோவில் உள்ள புகழ்வாய்ந்த கல்வெட்டு கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்ததாகும்.
10 கல்வெட்டுக்கள் உள்ளன.
அனைத்தும் பிற்காலப் பாண்டியா் காலத்தியவை. மாறவா்ம சுந்தரபாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வல்லப பாண்டியன் ஆகிய மன்னா்களின் காலத்தவையாகும்.
கல்வெட்டுக்களில் இவ்வூரைக் கேரளசிங்க வளநாட்டு கீழ்குண்டாற்றுத் திருவீங்கைக்குடி என்றும் கேரளசிங்க வளநாட்டுக் கீழ்குண்டாற்று மருதங்குடி என்றும்
மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் குறிக்கின்றன.
பல்லவ மன்னன் நரசிம்மவா்மன் இக்குடைவரைக் கோவிலைக் கட்டுவித்தாகவும் கல்வெட்டு கூறுகின்றன.
தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகிறது.
மாதச்சதுா்த்திகளிலும், ஆவணியின் வளா்பிறைச் சதுா்த்தியுடன் முடியும் பத்து நாட்களில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.