Breaking News :

Friday, April 04
.

வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படும் கோயில் கதவு?


காஞ்சிபுரத்தில் வருடத்திற்கு ஒருமுறை மகாசிவராத்திரி அன்று மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்யும் பிறவாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் 1300 வருட பழமையானது. பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. இந்த சிவாலயம், தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"தென்று அருளிச்செய்தார். வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும். இதனாலேயே இத்தலம் பிறவாத்தானம் எனப்பட்டது. இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் கஜலட்சுமி, தக்ஷிணாமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி, ஜலந்தரஸம்ஹர மூர்த்தி, ப்ரம்மா,விஷ்ணு மற்றும் துவார பாலகர்கள் என பல அழகிய சிற்பங்களும் கோயில் அமைப்பும் மிக சிறப்பானது.

பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் சென்று, காமராஜ் நகர் குடியுறுப்பு பகுதியில் உள்ள இக்கோயிலை அடையலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.