பெரும்பாலான குடும்பங்களில் முதல் குழந்தையாக பிறக்கும் மகன் அல்லது மகள் தான் இந்த பித்ரு சாபத்தால் வாழ்நாள் முழுக்க அவதிப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
இதிலிருந்து மீள்வதற்கு மிக எளிய வழியை காளி சித்தர் நமக்கு உபதேசமாக கொடுத்துள்ளார். பௌர்ணமி அன்று 108 எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்க்க வேண்டும் .சிவ கனி என்பது எலுமிச்சை பழம் தான்......108 பழங்களில் ஒன்று கூட காயாக இருக்கக் கூடாது; அரை வாசி பழுத்து மீதி காயாக இருக்கக் கூடாது.
உங்கள் தெருவில் அல்லது ஊரில் உள்ள காளி கோயிலுக்கு செல்ல வேண்டும்.
பூசாரியிடம் கொடுத்து இந்த மாலையை காளிக்கு மாலையாக அணிவிக்க வேண்டும். அவ்வாறு அணிவிக்கக் கூடிய வினாடியில் நீங்கள் காளி தாயை தரிசனம் செய்ய வேண்டும்.
உங்கள் பெயர் ஜென்ம நட்சத்திரம் சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். (பிறந்த ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயர் மட்டும் சொன்னால் போதுமானது.)
சிகப்பு அரளி மாலையை அதன் பிறகு காளி தாய்க்கு அணிவிக்க பூசாரியிடம் கொடுக்க வேண்டும். பூசாரி காளி தாயின் கழுத்தில் அணிவிக்கும் போது அதை நீங்கள் தரிசனம் செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கலை படையலாக இடவேண்டும் .
சரியாக 30 நிமிடங்களுக்கு பிறகு அங்கே வரும் பக்தர்களுக்கு அந்த சர்க்கரை பொங்கலை பிரசாதமாக கொடுக்க வேண்டும். இதை செய்பவர்களும் கடைசியாக சர்க்கரைப்பொங்கலை பிரசாதமாக சாப்பிட வேண்டும்.
இது போன்று 16 பவுர்ணமி நாட்களுக்கு காளி வழிபாடு செய்வதால் பித்ரு சாபம் நீங்க சரியான வழிமுறை உங்களை தேடி வரும்!!!
பதினாறு பௌர்ணமி நாட்கள் முடியும் வரை இந்த வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது மது அருந்தக்கூடாது;
இந்த கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே காளித்தாயின் அனுக்கிரகம் முழுமையாக கிடைக்கும். சிவனும் சக்தியும் இணைந்த வடிவம்தான் காளி தேவி!!!
பத்திரகாளி ,அங்காள பரமேஸ்வரி, செங்காளி,கருட காளி, கிருஷ்ண காளி,இரட்டை காளி, பச்சை காளி,பவள காளி, ருத்ர காளி, மயான காளி, ஆகாச காளி, வன பத்திர காளி, காமாட்சி ,அகோர காளி, பைரவ காளி, யோக காளி, அஷ்ட காளி,நவ காளி,சகஸ்ர காளி, மக்காளி , புவன காளி, விபூதி காளி, யவன காளி, குமரிக் காளி என்ற பெயரில் உள்ள எல்லா தெய்வமும் காளி வடிவங்கள் தான்!!!
பாரதியார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா ,ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஏராளமான மகான்கள் காளித்தாயின் அருளை பெற்ற பிறகு மிகவும் உன்னதமான ஆன்மீக வாழ்க்கையையும் மிகவும் உயர்வான மறு பிறவிகளையும் பெற்றார்கள்.
மிகவும் கருணை உள்ளம் கொண்ட தெய்வம் தான் காளி .
இவள் தனது கருப்பு நிறம் மாறுவதற்கு ஈசனை நினைத்து தவம் இருந்தாள்.......ஈசன் வரம் கொடுத்த பின்னர் ஒளிரும் பொன்னிற தேகத்தை பெற்றாள்.....அப்போது கவுரி என்ற பெயரில் அருள் பாலிக்க துவங்கினாள் !!!