புண்ணிய மாதமான புரட்டாசி மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் நாளை 17ம் தேதி துவங்குகிறது.
புரட்டாசியின் முதல் மற்றும் கடைசி ஆகிய இரண்டு நாட்களுமே பெளர்ணமி திதியாக அமைவதால், இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 17ம் தேதி வரை அமைந்துள்ள புரட்டாசி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தியும், 2வது சனிக்கிழமையில் ஏகாதசியும், கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதம், விஜய தசமி ஆகியனும், அதற்கு அடுத்த நாளே ஏகாதசியும் வருவதாக அமைந்துள்ளது.
அக்டோபர் 02ம் தேதியான புதன்கிழமை மகாளய அமாவாசையும், 2 பவுர்ணமிகளும் புரட்டாசி மாதத்தில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
புரட்டாசி மாதத்தில் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
தெய்வங்கள் பெருமாளை வழிபட பூமிக்கு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் என சொல்லப்படுவதால் சனியால் பாதிப்பு இருப்பவர்கள் புரட்டாசியில் விரதம் இருந்தால் அதிலிருந்து விடுபடலாம்.
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை.
ஓம் நமோ நாராயணா. ...