Breaking News :

Wednesday, February 05
.

புஷ்பங்களை கொண்டு பூஜை செய்யும் முறை?


சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;

புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு. வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம்.

மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான்.

வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப்
பதால், சகல பாவங்களும் விலகும்.

வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.

சுவர்ண புஷ்பம், மூன்று நாளும்; வில்வம், ஐந்து நாளும்; துளசி, பத்து நாளும் திரும்பத் திரும்ப எடுத்து, பூஜிக்கலாம்; பழசு என்ற தோஷமில்லை.

ஸ்நானம் செய்தபின், அப்படியே புஷ்பம் பறித்து வந்தால், அது, பூஜைக்கு உதவாது.
ஈரவேட்டி மாற்றி, காய்ந்த வேட்டி உடுத்தி, நெற்றிக்கிட்டு, வாழை இலை அல்லது பூக்குடலையில் கொண்டு வர வேண்டும்.

கீழே விழுந்த புஷ்பம், வஸ்திரத்தில், கையில் கொண்டு வந்த புஷ்பம், வாடியது, புழு அரித்தது, கேசம் சேர்ந்தது ஆகிய புஷ்பங்களைத் தள்ள வேண்டும்.

அட்சதையால் விஷ்ணுவையும், துளசியால் விநாயகரையும், அருகினால் தேவியையும், வில்வத்தால் சூரியனையும் பூஜிக்கக் கூடாது.

ஊமத்தை, எருக்கு புஷ்பங்கள், விஷ்ணுவுக்கு கூடாது.
பூஜைக்குரிய எருக்கு, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை, பாதரீ, கண்டங்கத்தரி, அரளி, நீலோற்பலம் ஆகிய இந்த எட்டும், அஷ்ட புஷ்பங்கள் எனப்படும்.

புஷ்பத்தை கிள்ளி, கிள்ளி பூஜை செய்தால் தரித்ரியம் ஏற்படும்.
பல நாமாக்களுக்கு ஒரு முழு புஷ்பம் அர்ச்சிக்கலாம்.

பத்திரத்தை கிள்ளி அர்ச்சிக்கலாம்.
வில்வம், துளசியை தளம், தளமாக அர்ச்சிக்க வேண்டும்.

தாமரை பூவில் சரஸ்வதியும், அரளிப் பூவில் பிரம்மாவும், வன்னியில் அக்னியும் இப்படி ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு தெய்வம் உள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.