சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சியைப் போலவே ராகு-கேது பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரது ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும்.
திருமணமானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். இப்படி, ராகு-கேது தோஷங்களால் பல்வேறு வகையில் அவதிப்படுவோர் உண்டு. அந்த தோஷத்திற்குரிய பரிகாரத்தலங்களை வழிபட்டால், அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
திருக்களாச்சேரி
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடிக்கு அருகே உள்ளது திருக்களாச்சேரி. மகாவிஷ்ணு வழிபட்ட தலம் என தலபுராணம் கூறுகிறது.
ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை சமர்ப்பித்து, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு- கேது தோஷம் விலகும்.
ஸ்ரீகாளஹஸ்தி
ஸ்ரீகாளஹஸ்தி, ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று. இது வாயுத் தலம். காற்றாக எம்பெருமானே எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும் என்பது ஐதீகம்.
சென்னை ஸ்ரீகோலவிழி அம்மன்
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில்.
ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில்
காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில். ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன் அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம்!
இங்கு வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன
தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர்
திருநெல்வேலி, தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேதுவுடன் அருள் பாலிக்கிறார் ஸ்ரீசக்தி விநாயகர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
திருப்பாம்புரம்
கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருப்பது இக்கோயிலின் சிறப்பு. ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. இங்கு வழிபட்டால் ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும்.
திருமுருகன்பூண்டி
திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் - திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்
திருநெல்வேலி அருகே அமைந்துள்ளது செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர் ஆலயம். ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர்.
சிவன் போற்றி 108
1. ஓம் தியானேஸ்வரனே போற்றி போற்றி
2. ஓம் பரமரகசியனே போற்றி போற்றி
3. ஓம் ஜெகத் ரட்சகனே போற்றி போற்றி
4. ஓம் சின்மய முத்திரையே போற்றி போற்றி
5. ஓம் மருத்துவப் பொருளே போற்றி போற்றி
6. ஓம் பொற்கழல் நாயகனே போற்றி போற்றி
7. ஓம் பிறப்பு அறுப்பவனே போற்றி போற்றி
8. ஓம் எண்ணிலா கருணையே போற்றி போற்றி
9. ஓம் சுடலை ஈசனே போற்றி போற்றி
10. ஓம் வேதப் பொருளே போற்றி போற்றி
11. ஓம் பிறைசூடிய பித்தா போற்றி போற்றி
12. ஓம் மௌன குருவே போற்றி போற்றி
13. ஓம் சிவ மருந்தே போற்றி போற்றி
14. ஓம் சிவ துதியே போற்றி போற்றி
15. ஓம் சிவ யோகமே போற்றி போற்றி
16. ஓம் சிவ நீதியே போற்றி போற்றி
17. ஓம் சிவ கயிலையே போற்றி போற்றி
18. ஓம் கஷ்டம் விலக்குபவனே போற்றி போற்றி
19. ஓம் தமிழ் வேதச் சரமே போற்றி போற்றி
20. ஓம் வினை தீர்ப்பாய் போற்றி போற்றி
21. ஓம் குறை பொறுத்தவா போற்றி போற்றி
22. ஓம் ஆருத்ரா போற்றி போற்றி
23. ஓம் அனைத்து உயிர் தாயே போற்றி போற்றி
24. ஓம் அனைத்து உயிர் தந்தையே போற்றி போற்றி
25. ஓம் கேட்டதை கேட்டபடி தருபவனே போற்றி போற்றி
26. ஓம் திரிசூல திரயம்பகனே போற்றி போற்றி
27. ஓம் பிக்க்ஷாடனரே போற்றி போற்றி
28. ஓம் அர்த்த நாரீஸ்வரா போற்றி போற்றி
29. ஓம் மெய்ஞான ரூபனே போற்றி போற்றி
30. ஓம் கருணை நாதா போற்றி போற்றி
31. ஓம் கொன்றை மலர் சூடியவா போற்றி போற்றி
32. ஓம் இன்சொல் அன்பனே போற்றி போற்றி
33. ஓம் சிவ குல கொழுந்தே போற்றி போற்றி
34. ஓம் பீஜாச்சரனே போற்றி போற்றி
35. ஓம் உள்ளொளி ஜோதியே போற்றி போற்றி
36. ஓம் நீக்கமற நின்றவா போற்றி போற்றி
37. ஓம் இசை பிரியனே போற்றி போற்றி
38. ஓம் பாடல் லயனே போற்றி போற்றி
39. ஓம் மெய் ஞான குருவே போற்றி போற்றி
40. ஓம் தத்துவப் பொருளே போற்றி போற்றி
41. ஓம் தத்புருஷா போற்றி போற்றி
42. ஓம் பதப்படுத்துபவனே போற்றி போற்றி
43. ஓம் மனதிடப்படுத்துபவனே போற்றி போற்றி
44. ஓம் நிகரற்றவா போற்றி போற்றி
45. ஓம் பிறை நிலவே போற்றி போற்றி
46. ஓம் பன்னிரு திருமறையே போற்றி போற்றி
47. ஓம் பராமரிப்பவனே போற்றி போற்றி
48. ஓம் வேதத்தை படைத்தவனே போற்றி போற்றி
49. ஓம் கருணை கொண்ட பாதமே போற்றி போற்றி
50. ஓம் சிதம்பர ரகசியமே போற்றி போற்றி
51. ஓம் மறையாத கீர்த்தியே போற்றி போற்றி
52. ஓம் சர்வ வியாபியே போற்றி போற்றி
53. ஓம் என் குறை தீர்ப்பாய் போற்றி போற்றி
54. ஓம் எனக்கென்று செவிசாய்த்தாய் போற்றி போற்றி
55. ஓம் பேசும் தெய்வமே போற்றி போற்றி
56. ஓம் பிராண நாதா போற்றி போற்றி
57. ஓம் மன்னித்து காப்போனே போற்றி போற்றி
58. ஓம் இலையில் மருந்தானவா போற்றி போற்றி
59. ஓம் சிவதீட்சை தந்த சிவமே போற்றி போற்றி
60. ஓம் சிவனடியார் வழிகாட்டியே போற்றி போற்றி
61. ஓம் அன்பு வசம் ஆனவனே போற்றி போற்றி
62. ஓம் உலக முதல்வா போற்றி போற்றி
63. ஓம் குருவாகி வந்த ரூபனே போற்றி போற்றி
64. ஓம் சிவ அடியார்க்கு அடிமையானவனே போற்றி போற்றி
65. ஓம் உலகை ஆட்டி வைப்பவனே போற்றி போற்றி
66. ஓம் சூரியனை படைத்தவா போற்றி போற்றி
67. ஓம் சந்திரனால் குளிர்ச்சித்தவா போற்றி போற்றி
68. ஓம் பரவெளியில் புலப்படாதவா போற்றி போற்றி
69. ஓம் சித்தத்தில் சிவமாக அமர்ந்தவா போற்றி போற்றி
70. ஓம் நரை, திரை, மூப்பு இல்லாதவா போற்றி போற்றி
71. ஓம் எம காலனிடம் காக்க வல்ல தவமே போற்றி போற்றி
72. ஓம் பிணி தீர்த்தாய் போற்றி போற்றி
73. ஓம் மனம் கூடினால் கூடுபவனே போற்றி போற்றி
74. ஓம் உன்னை வேண்ட உன்னை தருவாய் போற்றி போற்றி
75. ஓம் எல்லாவற்றிலும் உறைந்தாய் போற்றி போற்றி
76. ஓம் விதைக்குள் உயிரானவா போற்றி போற்றி
77. ஓம் உழவனின் உழைப்பானவா போற்றி போற்றி
78. ஓம் என் நினைவில் அகலாதவா போற்றி போற்றி
79. ஓம் என் பிறப்பறுக்க மனதை ஆட்கொள்வாய் போற்றி போற்றி
80. ஓம் வேண்டும் வரம் அளிக்கும் பரமனே போற்றி போற்றி
81. ஓம் இனம் அற்றவா போற்றி போற்றி
82. ஓம் ஐம் பூத நாயகனே போற்றி போற்றி
83. ஓம் ஞான திருஷ்டி தந்தனரே போற்றி போற்றி
84. ஓம் மோத நாடி உடைத்தருள்வாய் போற்றி போற்றி
85. ஓம் அண்ணாமலையரே போற்றி போற்றி
86. ஓம் ஜோதி மலையனே போற்றி போற்றி
87. ஓம் குண்டலிபதியானவரே போற்றி போற்றி
88. ஓம் மந்திர வலிமை தருபவனே போற்றி போற்றி
89. ஓம் தலை உச்சியின் உள் இறங்குபவரே போற்றி போற்றி
90. ஓம் எல்லாம் துறந்த சிவசொரூபனரே போற்றி போற்றி
91. ஓம் உடல் எங்கும் வியாபிப்பவரே போற்றி போற்றி
92. ஓம் வில்வத்தால் வினைபோக்கச் செய்தவரே போற்றி போற்றி
93. ஓம் மோனசக்தியில் சிவசத்து தந்தனரே போற்றி போற்றி
94. ஓம் அண்ணாமலையானவரே போற்றி போற்றி
95. ஓம் ஆத்ம ஞானனே போற்றி போற்றி
96. ஓம் சித்தனாக உலகில் உலா வருபவரே போற்றி போற்றி
97. ஓம் பாறைக்குள் தேரைக்கு உணவு தந்தவரே போற்றி போற்றி
98. ஓம் கௌரி நாதனே போற்றி போற்றி
99. ஓம் சங்கத் தமிழ் தந்தவா போற்றி போற்றி
100. ஓம் கௌரி கண்ட மூர்த்தியரே போற்றி போற்றி
101. ஓம் மௌன மௌளீஸ்வரரே போற்றி போற்றி
102. ஓம் முப்பால் கடந்தவரே போற்றி போற்றி
103. ஓம் சிவபுரத்தவரே போற்றி போற்றி
104. ஓம் தேவர்களின் தெய்வமே போற்றி போற்றி
105. ஓம் நீதி கடவுளானவரே போற்றி போற்றி
106. ஓம் மானசீக பூஜை ஏற்பவரே போற்றி போற்றி
107. ஓம் தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி
108. ஓம் எல்லாம் விலகி நின்மனதில் சிவ தரிசனம் கண்டனரே போற்றி போற்றி
சிவாயநம திருச்சிற்றம்பலம்