சனியின் கெடுபலன் தோஷம் குறைய , எந்தெந்த வழிபாட்டை ,எப்படி எப்படி செய்ய வேண்டும்?
ஏழரைச் சனி, அட்டம சனி , பாவ தொடர்பு பெற்ற சனி திசை ,புத்தி கடுமையான கெடு பலனை கொடுக்கும். சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதன் கொடுமை தெரியும். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் , கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வர நல்ல பலன்களை பெறலாம்.
1. சனியின் குரு காலபைரவர்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனியின் குருவான காலபைரவரை,தினசரி ராகு கால நேரத்தில் வழிபடுவது நல்லது.
நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை தண்டிக்க காத்திருப்போம்.
ஆனால் நமக்கு குருவாக இருப்பவர்கள் , அவரை தண்டிக்காதே என கட்டளை இட்டால், வேறுவழியின்றி, நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், குருவின் வார்த்தையை மீறாமல் , தண்டிக்காமல் இருப்போம். அதுபோல் , சனியின் அதிபதியான கால பைரவரை வழிபடுவது, சனியின் தோஷத்தை நிச்சயம் குறைக்கும்.
2.சனிக்கிழமை காலை, சனி ஹோரையில், காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, தோஷத்தைக குறைக்கும்.
3. மண் அகல் விளக்கில் உபயோகப்படுத்தாத, காட்டான் சிவப்புத் துணியில், சிறிதளவு மிளகை கட்டி, நல்லெண்ணெய் ஊற்றி , சனிக்கிழமை, சனி ஓரையிலோ அல்லது சனிக்கிழமை ராகு கால நேரத்திலோ விளக்கேற்றி, காலபைரவர் காயத்ரி மந்திரத்தை
11 முறை கூறிவழிபட்டு, சிவன் கோயிலில் உள்ள சிவனையும் வழிபட்டு வர, தோஷம் நிச்சயமாக குறையும்.
4.தினசரி விநாயகப் பெருமானை வீட்டிலும் ,கோயிலிலும் வழிபடுவது சனி தோஷத்தை குறைக்கும்.
சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.
5. அனுமன் சாலிசா தினமும் படிக்கலாம்.
6. தினசரி சுந்தரகாண்டத்தில் ஒரு சர்க்கம் (பகுதி) பாராயணம் செய்யலாம்.
7.நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீராமஜெயம் மனதிற்குள் சொல்லலாம் அல்லது எழுதலாம்.
8. பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களை, சனிபகவான் எந்தவிதத்திலும் பெரிய அளவில் துன்புறுத்துவதில்லை.
9. குலதெய்வக் கோயிலுக்கு மாதம் ஒருமுறையோ அல்லது குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று வருவது நல்ல பலனைக் கொடுக்கும் .சனி தோசம் அண்டாது.
தினசரி ஒரு நிமிடமாவது குலதெய்வத்தை பாராயணம் செய்பவர்களுக்கு, சனியின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை தராது.
10.முறையாக திதி தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவார்களையும், ஏழைகளுக்கும், வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், தங்களால் முடிந்த உதவிகளை செய்பவர்களுக்கு, சனி தோஷம் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது.
11.எந்த உதவியும் மற்றவருக்கு செய்ய முடியாவிட்டாலும், கைப்பிடி அளவு அரிசியை, எறும்புப் புற்றில் தூவலாம். இது சனி தோஷத்தை நீக்க சக்திவாய்ந்த பரிகாரம்.
12.நீதி நேர்மையுடன் வாழ்பவர்களையும், மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்களையும், சனிபகவான் பெரிய அளவில் தண்டிப்பதில்லை.
சுருக்கமாக சொன்னால் நேர்மையாக வாழ்பவர்களை, சனிபகவான் பெரிய அளவில் எந்தவிதத்திலும் தொந்தரவு படுத்துவதில்லை.
லேசாக பட்டி ,டிங்கரிங் பார்த்து அனுப்பிவிடுவார்.
தவறுகள் வாழ்க்கையில் கடுமையாக செய்திருந்தால், அவர்களை, சனி, அவருடைய ஆதிக்க காலத்தில், கரும்பு மிஷினில் ,அகப்பட்ட கரும்பை போல் பிழிந்து எடுத்து விடுவார்.
கிட்னி, சட்னி ஆகாம இருக்க, Wanted வரக்கூடிய தேவையில்லாத ( மது,மாது,சூது) போன்ற கெட்ட பழக்கங்களை ,ஜோதிடரின் அறிவுரைப்படி ,ஆரம்பத்திலேயே அண்டவிடாமல், களை எடுப்பது நல்லது.
இல்லைன்னா சனியின் ஆதிக்க காலத்தில், படுக்க வெச்சு, வாயில நெல்லு குத்திட்டு போயிரும். பாவ தொடர்பு பெற்ற சனி, ராகு திசை, அட்டமாதிபதி திசையில் வரும் 71/2 ,அட்டம சனி, வேணாம்ம்ம் விட்டுறுறுறு உயிர்நாடிடிடி.
அடே ரத்த ஓட்டமெல்லாம் நிக்குதுடா என்று சொல்வதைப்போல், சனியின் ஆதிக்க காலத்தில் ,உயிர் மட்டுமே உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த அளவு கஜகஜவென கசக்கி பிழிந்து விடுவார்.
அதனால் வாழ்வும், தாழ்வும் உங்கள் கையிலே உள்ளது. உங்களை ,நீங்கள் தான் நெறிப்படுத்தி கொள்ள வேண்டும்.