நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், திருமறைச்சேரி அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் ஆலயம் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல சிறப்புகள் மிக்க சிவாலயமாகும்.
வரலாறு சுருக்கம்:
பூவுலகில் பூவும் நீரும் ஏற்க வேணவா கொண்டு தென்நாட்டில் இறைவன் எழுந்தருளும் தலங்கள் பல.
அவற்றுள் சோழவளநாடு
என போற்றபடும் ஆருருக்கு தெற்கே 25கி.மீ தூரத்தில்,ஏறத்தாழ
கி.பி 850-ல் உதயமான பி ற்கால சோழமரபில்
ராஜராஜ சோழசக்ரவர்த்தியின்
தோற்றம்வரை சோழநாடு
கூற்றம் என்றும்,பின்னர் கி.பி 1100-க்கு பிறகு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வண்டாளை வேளூர்கூற்றம்
என்றும் பகுக்கப்பட்ட குறுநில ஆட்சி பகுதி அமைந்த தற்காலத்தே மாரசேரி என அழைக்கப்படும் திருமறைசேரி வேதங்களும் வணங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும்
மூலவர் : நாகநாதர் ,
அம்மை : சௌந்தரநாயகி ,
சுந்தரநாயகி
மூர்த்தி : வேதங்கள் வணங்கிய திருமறைநாதர் (பழைய ஆலயம் )
வேதபுரிநாதர், வேதநாதர்
தாய் : வேதநாயகி , திருமறைநாயகி
தலம் : திருமறைசேரி ,
வேதபுரி , வேதபுரம் , மறைசேரி
சிறப்பு :
* வேதங்கள் வழிபட்ட தலம்*
* பைரவர் சிறப்பு. இத்தல பைரவரை அஷ்டமி தினத்தில் வழிபட தொலைந்த வாகனங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை*
*தொடர்ந்து 8 அஷ்டமி தினங்கள் வழிபாட்டு வந்தால் இழந்த செல்வங்கள் மீண்டும் பெறலாம் என்பதும் உணர்தோர் உரைக்கும் வாக்கு*
*நாகநாதருக்கு அம்மாவாசை அன்று வழிபாடு செய்து முழு தேங்காயை வெட்டி தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும்*
*வேதங்கள் தவம் இயற்றிய தலம், சூரியன் பூஜிக்கும் தலம்-, ராகு வழிபட்டு நலம் பெற்ற தலம், பைரவரின் காணாமல் போன வாகனம் மீண்டும் கிடைக்க அருள்செய்த திருத்தலம்...எனப் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது திருமறைச்சேரி*!
தென்னாடுடைய சிவனார் நாகநாதர் எனும் திருப்பெயர் ஏற்று, அம்பிகை சுந்தரநாயகியோடு கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலம், தற்போது வழக்கில் ‘மாராச்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.
ஊர்ப் பெயர் மட்டுமல்ல, ஒருகாலத்தில் கோலாகலமாகத் திகழ்ந்த சிவனாரின் ஆலயமும் தன்னிலையில் மாற்றம் கண்டுவிட்டது.
சுந்தர நாயகி சமேத நாகநாதப் பெருமானை பைரவர், சூரியன், ராகு ஆகியோர் பூஜித்து வரம் பெற்றதாகத் ஊர்மக்கள் கோயிலின் வரலாறு பற்றி கூறுகின்றார்கள்
இந்தத் தலத்து இறைவனை சூரியன் வழிபட்டதற்கு சாட்சியாக இன்றைக்கும் பங்குனி மாதம் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் நாகநாதரின் திருமேனியில் படுவதாகச் சொல்கிறார்கள்.
*சூரிய தோஷம் நீக்கும் தலம்*!
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலிமை குன்றி இருந்தால், இங்கு வந்து நாகநாதரை வழிபட்டால் போதும்.
வலுக் குன்றிய சூரியனால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல், ராகு தோஷம் உள்ளவர்களும் நாகநாதரை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறலாம் என்றும் நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்.
இங்குள்ள நாகநாதரை வழிபட்டுத்தான், திருவாதவூரில் காணாமல் போன தன் வாகனத்தை பைரவர் திரும்பப் பெற்றாராம்.
எனவே, வாகனம் தொலைந்துபோனவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், தொலைந்துபோன வாகனத்தை திரும்பப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.!
வாகனம் மட்டுமல்ல, வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்கும் நல்வாழ்க்கையை மீட்டுத்
தரும் நாதன் இவர்!
சிவகரந்தை எனும் அரிய மூலிகை செடி உள்ள சிறப்பு மிக்க தலம்.
இந்தத் தலத்தில் ஒரு விசேஷம், சிவகரந்தை என்னும் அபூர்வ செடியாகும்.
மகா சிவராத்திரி காலத்தில் மட்டுமே பூக்கக்கூடிய சிவகரந்தை பூக்களை மூன்றாம் கால பூஜையில்
சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது மிகவும் விசேஷம்!
மகா சிவராத்திரி முடிந்த
சில தினங்களில் இந்த செடி வாடிவிடுமாம்.
இங்கிருந்து சிவகரந்தை மலர்கள் அடியார் பெருமக்களால் பல சிவாலயங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறதாம்.
சிறப்புகள் மிக்க இவ்வாலயம், காலத்தின் கோலத்தால் மிகவும் சிதிலமுற்று வழிபாடுகள் குன்றி, முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் இருந்துள்ளது.
வழிபாடுகள் :
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழிபாடின்றி
சிதிலமடைந்திருந்த இச்சிறப்பு மிக்க ஆலயத்துள் நாகநாதர் திருவருளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து இவ்வூர் அடியார்..வடுவம்மாள் என்பர் மட்டும் தினமும் திருவிளககேற்றி வழிபாடு செய்து வந்துள்ளார்.
உள்ளே நுழைய முடியாத நிலையில் இருந்த இந்த
ஆலயத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்
குறும்பல் அடியார் .முத்து
குழுமத்தினர் மற்றும் அடியார்.செந்தில்.ஐயா
திருத்துறைபூண்டி ஓம்காரம்
அடியார் திருகூட்டதினர்
மற்றும் உள்ளூர் அன்பர் ஆசிரியர்.வேணு.காளிதாசன் ஐயா அவர்களும் மற்றும் பல சிவனடியார்களின் தன்னலமற்ற தொண்டால்
2016ல் திருப்பணி துவங்கி
2018 சூன் 4ம் நாள் அம்மையப்பனுக்கு வெகு சிறப்பாக குடமுழுக்கு நடந்தேறியது.
ஆறு ஆண்டுகளுக்கு முன் குறும்பல் அடியார் .முத்து
குழுமத்தினரால் பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்தேறி வருகிறது.
கடந்த ஆண்டு முதல் அமாவசை சிறப்பு வழிபாடும் சிறப்புற நடைபெறுகிறது .
பிரதோஷவழிபாடு சிவன் அடியார் திருகூட்டதினரால் வெகு சிறப்பாக
நடைபெறுகிறது.
அற்புத பாணத்துடன் அழகான லிங்க மூர்த்தி. அதற்கு இணையாக சுந்தரநாயகி என்ற பெயருக்கு ஏற்றார்போல் ஜடாமகுடம் தரித்த அம்பிகையின் அழகு மிளிரும் அம்பாளின் கம்பீரத்தோற்றம் காண்போர் கண்களை விட்டு அகல மறுக்கின்றது.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் சுவாமி திருக்கோவில் -
திருமறைச்சேரி
நாகை மாவட்டம் ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?
திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் திருத்துறைப் பூண்டியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள மணலி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள திருமறைச்சேரிக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.