ஸ்ரீவில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவலம், இராணிப்பேட்டை மாவட்டம், வேலூர்
திருமாலின் திரு வண்ணம்தான் கண்ணுக்கு எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது.
எம்பெருமான் நன்கு கரத்தோன்,அவர் தன் திருக்கரங்களில் சங்கு,சக்கரம்,ஏந்தி காயாம்பூ இதழ் போல கருத்து திருமேனி உடையவராக காணப்படுகிறார். ஆனால் அவரது கண்கள் மட்டும் தாமரை இதழாய் மென்மையாய் சிவந்திருக்கிறது. கோடி மன்மதர்களின் அழகுக்கு ஈடானவராக கோடி சூரியப் பிரகாசம் கொண்டவராக, பார்ப்போர் அனைவரையும் மயக்கும் யவ்வன மேனியனாய் திகழ்கிறார்.
பேரழகு பொருந்திய அவயவங்களைக் கொண்ட அவரை மேலும் அழகுற செய்கின்றன,அவர் அணிந்திருக்கும் தோள்வளை, ஹாரம்,முன்கைவைளை,சதங்கை முதலான திரு ஆபரணங்கள்.
இந்த அலங்கார பூஷிதனின் திருமேனி அப்ராக்ருத சந்தனம் பூசப்பட்டு பிரபஞ்சம்மெங்கும் நறுமணம் வீசுகின்றது.அவர் அணிந்திருக்கும் பீதாம்பரம்தான் எத்தனை கம்பீரமானது!
ஈஸ்வரார்களுக்கெல்லாம் மேலான பரமேஸ்வரனாய் விளங்கும் எம்பெருமான் நித்தியர்களாலும், முக்தர்களாலும் இடைவிடாது சேவிக்கப்படுபவராய்,அனைவரை விடவும் பிரம்மாண்டமாய், ஸர்வவியாபியாக எழுந்தருளியிருக்கிறார்.
ஸ்ரீமத் ராமானுஜர் இயற்றிய வைகுண்டகத்யத்வத்தில் என்னும் அத்தியாயத்தில் திருமாலின் அழகை இவ்வாறாக வருணித்துள்ளார்.
ஶ்ரீவில்வநாதேஸ்வரர் சிவாலயத்தின் கருவறை பின்புறம் மேற்கு புறம் கோஷ்டத்தில் உள்ள சோழர் கால அழகு சிற்பம்.