Breaking News :

Sunday, February 23
.

மண் கொடுத்தால் பொன் கொடுக்கும் சுயம்புலிங்க திருக்கோவில்


“நல்லவனாகஇருக்கிறான் ஆனால், ஏன் அவன் கஷ்டப்படுகிறான்?! அவர் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்.

 நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை, ஆனால் எனக்கு ஏன் இவ்வளவு துன்பம்?!.அவன்
அவ்வளவு அநியாயம் பண்ணுகிறான் ஆனால், சுகமாக இருக்கிறானே! எப்படி?

 ஊரையே அடித்து உலையில் போட்டு இருக்கிறான் ஆனால்,அவன் நல்லாத்தானே இருக்கிறான்!.”

 இந்தக் கேள்விகள் இல்லாத மனிதர் இந்த உலகிலேயே இருக்க முடியாது.தற்போது நீங்கள் சிரமம் அனுபவித்துக்கொண்டு இருந்தால், அது போன பிறவியின் வினைப்பயனாகத் தான் இருக்க வேண்டும்.
 'கர்ம வினை'.உலகில் கோடிக்கணக்கில் மக்கள் உள்ளனர்.அவர்களில் நமக்கு தெரிந்தவர்கள் பலர்
இருந்தாலும்,நெருக்கமாக ஒரு சிலரை மட்டுமே குறிப்பிடுவோம்.

இவற்றில் சிலரது வருகை நம் வாழ்வை குளிர வைக்கும்;சிலரது நட்பு நம்மை தீய வழியில்
நடத்தி சென்று அழித்து விடும். உறவுகளிலும் அப்படித்தானே!.

அதுபோல இந்த வாழ்வில் ஒரு சிலரிடம் நாம் அன்பாய் இருப்போம்;ஒரு சிலரிடம் பகைமை காட்டுவோம்;
 இன்னும் சிலரிடம் அன்பாய் இருந்து பகைமை காட்டுவோம்;ஒரு சிலர் நம் வாழ்வில் நுழைந்து நம் வாழ்கையையே தலைகீழாக்கி சென்று விடுவர்;

ஒரு சிலர் உடைந்து போன நம் வாழ்க்கையை ஒழுங்கு பண்ணுவர். இதெல்லாம் நம் வாழ்வில் எப்படி நிகழ்கிறது?!.இது தான் 'கர்ம வினை'..நம் முற்பிறவிகளின் பாவ புண்ணிய கணக்குகள் இவை.ஒருவரது பார்வையில் நன்மை என்று படுகின்ற செயல் மற்றொருவருக்கு தீமையாக படலாம்.

இப்பொழுது நன்மை செய்தால் அடுத்தபிறவியில் நன்மை விளையும்; தீமை செய்தால் தீமை விளையும் என்றாகிவிட்டால் இதற்கு தீர்வு தான் என்ன?!

இந்த சுழற்சி எப்பொழுது தான் முடியும்?!இதற்கு தீர்வு, பிறவி இன்மையே.திருக்கோயில் வழிபாடு,திருமுறை,
திவ்வியப்பிரபந்தம்,
திருப்புகழ்,அபிராமி அந்தாதி பாராயணம் ,
அன்னதானம், நற்செயல்
இவற்றைச் செய்து வினை நீக்கம் பெற்று உய்யலாம்.இப்படிப்பட்ட
வினைப்பயன்களில் இருந்து விடுபட்டு மறுபடியும் நாம் ஒரு தாயின் கருவறையில் பிறக்காமல் இருக்க,'கர்ம வினை'களில் இருந்து விடுபட நாம் ஈசனின் திருவடியை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

பரம்பொருளாய்
சுயம்புலிங்க சுவாமியே அருள்பாலிக்கிறார்.

இங்கு கருவறை கோஷ்ட
தெய்வங்களும் ,பிற சன்னதிகளும் ஆலயத்தில் இல்லாமல் அனைத்துமாய்
ஆதிபரம்பொருளாய் சுயம்புலிங்க சுவாமி அருள்வதாலும், ஆவுடை பாகம் காணப்படாததாலும் இத்தல ஈசனை முறைப்படி வழிபட்டால் நம்மை வருத்தும் கர்ம வினைகள் அகன்று நம் வாழ்விலும்,நம் சந்ததிகள் வாழ்விலும் வசந்தம்
மலர்ந்து, நாம் வாழும் போது நம் வாழ்க்கைக்கு வழி காட்டி,நம்
வாழ்க்கைக்குப் பிறகு நற்பதம் என்னும் ஒளி காட்டி நம் மாயப்
பிறப்பறுக்கும் பிஞ்சகனாய் இத்தல ஈசன் அருள்கிறார் என்கிறார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.