Breaking News :

Friday, April 04
.

கோவிலில் செருப்பு திருடு போவது நல்லதா கெட்டதா?


நாம் அணியும் காலணிகளை சரியான முறையில் பயன்படுத்தினால், செல்வம் பெருகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், சனி தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

நாம் செருப்பை கழட்டி விடும் போது ஜோடியாகவே விட வேண்டும். அவ்வாறு விடக்கூடிய பழக்கம் உங்களிடம் இருந்தால், உங்களின் மனமும், உடலும் தெளிவான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நம்முடைய வீட்டின் தலைவாசலை தெய்வத்திற்கு இணையாக வணங்குவோம். அத்தகைய தலைவாசலில் செருப்பை போட்டுக்கொண்டு நிற்பது அல்லது அதை தாண்டி வீட்டில் செருப்பை பயன்படுத்துவது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் வீட்டில் செருப்பை அணிந்துக்கொண்டு கல் உப்பு, பருப்பு, அரிசி ஆகியவற்றை தொடக்கூடாது. ஏனெனில், இவை அனைத்தும் லக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. சமையலறையில் செருப்பை போட்டுக்கொண்டு செல்லக்கூடாது. அதுப்போல சமைக்கும் போது செருப்பை போட்டுக்கொண்டு சமைக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. செருப்பை போட்டுக்கொண்டு உணவு உண்ணக்கூடாது.

நவகிரகங்களில் சனீஸ்வர பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். அவரின் தாக்கம் இருக்கும் இடமாக கால் சொல்லப்படுகிறது. அந்த காலில் நாம் அணியக்கூடிய செருப்பும் சனிபகவானின் தாக்கம் பெற்றதாக இருக்கிறது. நீங்கள் அணியும் செருப்பு பிய்ந்து மோசமான நிலையில் இருக்கும் போதும் அதை மாற்றாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றால், பணம் சம்மந்தமான பிரச்னைகள், நஷ்டம் ஏற்படும்.

செருப்பை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவதன் மூலம் சனீஸ்வர பகவானின் அருளும் ஆசியும் கிடைக்கும், உத்யோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் தொழில் நலிவடையும் போது செருப்பை வாங்கி கோவிலில் விட்டுச் சென்று விடுவார்கள். அதை மற்றவர்கள் எடுத்துச் செல்லும் போது அது தானமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கோவிலில் கழட்டிவிட்டு விட்டு சென்ற செருப்பு திருடு போய்விட்டால், சனீஸ்வர பகவானால் ஏற்படவிருக்கும் அனைத்து பிரச்னையும் சரியாகும் என்ற நம்பிக்கை உண்டு. உங்களுடைய கெட்ட கர்மா, பாவங்கள் போனதாக அர்த்தம். உங்கள் செருப்பு தொலைந்து போனால், அதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட போவதாக அர்த்தம்.

செருப்பு அணியும் நிறத்தைப் பொருத்து அதற்கு பலன்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. வெள்ளை நிறத்தில் செருப்பை அணிவது அதிர்ஷ்டத்தை தரும். கருப்பு மற்றும் அடர் நீலநிறத்தில் செருப்பு அணிந்தால், நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை அது இழுத்துக்கொள்ளும். சிகப்பு நிறம், மஞ்சள் நிற காலணிகள் முன்னேற்றம், காரியசித்தி, வெற்றியை ஏற்படுத்தும்.

பச்சை மற்றும் காவி நிறக்காலணிகள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை தரும் என்று சொல்லப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.