Breaking News :

Thursday, November 21
.

நந்தி வழிபாடு சிறப்புகள்


🍃நந்தி என்ற சொல்லுக்கு ‘ஆனந்தமாக இருப்பவன்’ என்று பொருள்.பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.

🍃நந்திக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு.இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான்,நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.

🍃நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும்,கையில் பிரம்பும்,உடைவாளும் இரு புஜங்களிலும் மானும்,மழுவும் உண்டு.

🍃நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு.ருத் என்பது துக்கம்;
ரன் என்பது ஓட்டுபவன்;
துக்கத்தை ஓட்டுபவன் என்பது பொருள்.நந்தி தேவரே உலகின் முதல் குரு.அவரிடம் அனங்கன்,இந்திரன்,சோமன்,கந்தர்வர்கள் போன்ற தேவர்கள் வேதங்களைக் கற்றார்கள்.

🍃சிவன்,சக்தி இருவர் முன்னும் பரமானந்தராக இருப்பவர் நந்தி தேவர்.சிவபெருமானின் முக்கண் பார்வைக்கு எதிரில் நிற்க நந்தி தேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது.இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

🍃நந்தியின் நிறம் வெண்மை.வெண்மை தூய்மையைக் குறிக்கிறது.அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே.நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தவர்.ஆக,தர்ம தேவதையே சிவபெருமானின் வாகனமாக அமைந்துள்ளது.
சிவபெருமானின் வாகனமும்,கொடியும்,ரிஷபமே.

🍃பிரதோஷம் அன்று நந்தி தேவருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனம் புரிகின்றார்.

🍃நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.வில்வ இலைகளால் அவரை அலங்கரித்து அர்ச்சித்தால் கோடி நன்மைகளை அருளுவார்.சிவப்பு அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்தல் சிறப்பு.

🍃பிரதோஷ காலம் பாவத்தைப் போக்கும் காலம் ஆகும்.அந்த வேளையில் நந்தி தேவரின் பீஜத்தைத் தொட்டு வணங்குவது வழக்கம்.அவரது கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.

🍃நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர்.அதனால் நாட்டியம் பயில்வோரும்,இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி  சிறந்து வளரும்.

🍃நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும் நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும்,உயர்ந்த பதவியும்,நல்ல எண்ணங்களும் நல்லொழுக் கமும் கிடைக்கும்.எல்லா வற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.

#ஸ்ரீ #நந்திகேஸ்வரா #போற்றி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.