Breaking News :

Sunday, February 23
.

தை பூசம் அன்று செய்ய வேண்டியவை?


முருகனுக்கு உகந்தது என்றால் அது மலைத்தேன். சுத்தமான தேன் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமாக காய்ச்சிய பாலில் தேவைக்கு ஏற்ப தேன், வாசனைக்காக ஏலக்காய் போட்டு, நன்றாக கலந்து இதை முருகனுக்கு எடுத்துச் செல்லுங்கள். குருக்களிடம் இந்த பிரசாதத்தை கொடுத்து முருகனுக்கு நெய்வேதியம் செய்து வாங்கிக் கொள்ளவும். பிறகு சின்ன சின்ன டம்ளரில் இந்த பாலை ஊற்றி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்தாலும் சரி, அந்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு போய் வீதியில் இருப்பவர்களுக்கும் இந்த பாலை தானமாக உங்களுடைய கையாலே கொடுக்கும் போது, கடன் சார்ந்த பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால், 2 லிட்டர் பால், ஐந்து லிட்டர் பால் என்று உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த தானத்தை செய்யலாம்.

இந்தப் பாலை நீங்கள் கொடுக்கும்போது, உங்கள் அருகில் எந்த உயிரினம் வந்தாலும் அந்த உயிரினத்தை உதாசீனப்படுத்த கூடாது. நாய், பூனை பசு எந்த ஜீவராசிகள் வந்தாலும் கொடுக்கலாம் தவறு கிடையாது. மனிதர்களுக்காக மட்டும்தான் இந்த தானம் என்று சொல்லி மற்ற ஜீவா ராசிகளை உதாசீனப்படுத்தி விடாதீர்கள். முருகர் எந்த ரூபத்திலாவது வந்து நீங்கள் கொடுக்கும் இந்த பிரசாதத்தை குடித்துவிட்டு உங்களுக்கான ஆசையை வழங்கி விடுவார்.

இந்த பரிகாரத்தை வீட்டிலேயே இருக்கும் முருகன் திருவுருவப்படத்திற்கு செய்துவிட்டு, வீட்டு பக்கத்திலேயே இந்த பாலை நீங்கள் அன்னதானம் செய்தாலும் தவறு கிடையாது. ஆனால் கட்டாயமாக தைப்பூசத் திருநாள் அன்று ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள தவற விடாதீர்கள்.

தைப்பூசத்தன்று இந்த பால் தேன் இரண்டையும் சேர்த்து தானம் கொடுத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது. வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமை கிருத்திகை, பங்குனி உத்திரம், இதுபோல முருகனுக்கு என்ன விசேஷ தினங்கள் வந்தாலும், அந்த நாளில் இந்த பொருளை பக்தர்களுக்கு தானம் கொடுக்கும் பழக்கத்தை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஆயுல் முழுவதும் உங்களை கடன் வாங்க விடாமலும் செல்வந்தர்களாகவும் வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி இந்த எளிமையான பரிகாரத்திற்கு இருக்கிறது.

வீட்டில் முருகனது சிலையோ அல்லது வேல் வைத்திருந்தாலும் சரி அதற்கு தேன் அபிஷேகம் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. முடிந்தவர்கள் பஞ்சாமிர்தம் செய்து நெய்வேத்தியம் வைத்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த எளிமையான வழிபாடு, இந்த தைப்பூசத் திருநாளில் உங்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை கொடுக்கும்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.