Breaking News :

Sunday, February 23
.

தைப்பூசம் வரலாறு!


அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப் பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவ து நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.

தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமா கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்வார்கள்.

மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல்,  போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவே ற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடு கள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவி ல்களிலும், எல்லா சிவன் கோவில்களிலு ம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுக ளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவி ல்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர் கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில் லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானி டம் வேண்டினர்.

கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்க ளின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளி யான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைக ளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழ ந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங் களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெரு மானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப் பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அப்படி அளிக்கப் பட்ட வேலினை ஆயுதமாக கொண்டே முருகன் அசுரகுலத்தை அழித்து தேவர்க ளைக் காப்பாற்றினான்.

தேவர்களுக்குத்தொல்லை கொடுத்த அரக்கர் களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலை வாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள்.

எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காம ல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராய ணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற் கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானி ன் ஆறுபடை வீடுகளிலும் முருக னடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத் தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறை வு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்தி க்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்க மாகக் கொண்டுள்ளனர். தங்களின் வேண்டு தல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.