வீட்டின் மூத்த பிள்ளைக்கும், வேறொரு வீட்டின் மூத்த பெண்ணுக்கும் திருமணம் செய்வதை தலைச்சனுக்கும் தலைச்சனுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறி தவிர்த்து வந்தனர்.
சொந்தத்திலேயே கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தாலி செய்யும் தங்கத்தின் எடையை கூடுதலாக செய்தால் தோஷம் கிடையாது. தாராளமாகத் திருமணம் செய்யலாம் எனக்கூறி வந்தனர். இதற்கான காரணத்தை யாராலும் சரிவரக் கூற முடியவில்லை. ஆராய்ந்து பார்த்தால்,
👉 கிராமப் புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களில் வசித்தவர்களும் வீட்டிற்கு ஒரு தம்பதியருக்கு குறைந்தபட்சம் ஆறு முதல் பத்து, பன்னிரெண்டு குழந்தைகள் வரை இருந்தனர். வீட்டின் மூத்த பிள்ளைக்கே சகல உரிமைகளும், பொறுப்புகளும் இருந்தன.
👉 வீட்டின் தலைவன் இறந்துவிட்டால் சகல பொறுப்புகளும் மூத்தவனையே சாரும். மூத்த பிள்ளைக்குத் திருமணம் முடித்துவிட்டால் அவருக்கு கீழ் உள்ள மற்ற அனைவருக்கும் திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களையும் செய்யும் பொறுப்பு மூத்தவனையே சாரும்.
👉 அதேபோல மூத்தவன், மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பெண் வீட்டில் ஆண் வாரிசு இல்லையென்றால் மற்ற அனைத்து பெண்களுக்கும் திருமணம் சீர் செய்யும் அனைத்து செலவுகளும் வீட்டு மூத்த மாப்பிள்ளையையே சாரும்.
👉 எப்போதும் வீட்டின் மூத்த பையன் மற்றும் பெண் குடும்ப சூழ்நிலைகளை புரித்து கொண்டு பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எனவே தான் குடும்ப பொறுப்புகளில் யாராவது ஒருவர் பொறுப்பாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பம் வளர்ச்சி அடையும்.
👉 எனவே தான் இருவரும் தலைச்சனாக இல்லாமல், இன்னொருவர் மற்றொரு குடும்பத்திற்கு சென்றால் இன்னொரு குடும்பத்தை அவர்கள் பொறுப்பாக கவனித்து கொள்வார்கள் என்ற நோக்கில் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
👉 இதை கருத்தில் கொண்டே தன் மூத்த பிள்ளை வருங்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் பெரியோர்கள் தலைச்சன் பிள்ளைக்கும், தலைச்சன் பெண்ணுக்கும் திருமணம் நடப்பதை ஏதோ காரணம் கூறி தடுத்து வந்தனர்.
👉 இன்றைய நாகரீக காலத்தில் கருத்தடைச் சட்டம் எல்லாம் வந்துவிட்ட பிறகு, ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கே கஷ்டப்படும் இன்றைய இளம் தலைமுறையினர் வீட்டிற்கு ஒரு பிள்ளை என்று பெற்றுக் கொண்டாலும் இனி தலைச்சனுக்கு தலைச்சன் தான் வரும் காலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வருவோம். ஆகவே தலைச்சனுக்கு தலைச்சன் திருமணம் செய்யக்கூடாது என்ற விதியே, இனிவரும் காலத்தில் அடியோடு மறைந்துவிடும்.
கட்டுகதைகளை மறப்போம் உண்மையை உணர்வோம்
நன்றி அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்