இப்படி உங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டங்களில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், நாளைய தினம் எளிமையாக நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்னென்ன.
முதலில் சில கோவில்களில் ராகு கால பூஜை காலபைரவருக்கு நடக்கும்.
அதுபோல உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது பைரவர் சன்னிதானத்தில் மதியம் 1. 30 மணிக்கு பைரவருக்கு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடந்தால், அந்த ராகு கால பூஜைக்கு சென்று கலந்து கொண்டு, கொஞ்சமாக தயிர் சாதம் நெய்வேத்தியம் வைத்து, பைரவரை வழிபாடு செய்தால் உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனை வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூடிய விரைவில் அடையும்.
காரணம் சூரிய பகவான் உங்களுடைய ஜாதகத்தில் சரியில்லை என்றால் வேலையிலும் தொழிலிலும் ஆரோக்கியத்திலும் பிரச்சினை வரும். அதை சரி செய்யத்தான், தேய்பிறை அஷ்டமியில், ராகு கால பூஜையில் காலபைரவர் வழிபாட்டை செய்வது சிறப்பு.
பெரும்பாலான கோவில்களில் மாலை நேரத்தில் தான் அஷ்டமி வழிபாடு அபிஷேக ஆராதனைகள் பைரவருக்கு நடைபெறும் பரவாயில்லை. நாளை அந்த கோவிலுக்கு செல்லும்போது உங்கள் வீட்டில் இருந்தே முந்திரியை மாலையாக கட்டி எடுத்துச் செல்லுங்கள். கடன் சம்பந்தப்பட்ட சுமையிலிருந்து வெளிவர பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து வெளிவர வியாழக்கிழமை பைரவருக்கு முந்திரி மாலை சாத்துவது ரொம்ப ரொம்ப நல்லது.
11, 21 உங்கள் வசதிக்கு ஏற்ப முந்திரியில் மாலை கட்டலாம். முடிந்தால் தயிர் சாதம், மாதுளை பழங்கள் முத்துக்களை பிரசாதமாக பைரவருக்கு எடுத்துச் சென்று, நெய்வேதியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு இதை தானமாக வழங்கி, முடிந்தால் அந்த பிரசாதத்தை கோவில் வெளியே யாசகம் கேட்பவர்களுக்கு தானம் கொடுங்க. பல மடங்கு புண்ணியம் உங்களை வந்து சேரும்.
இறுதியாக காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் சொன்னது தான் இது. தேய்பிறை அஷ்டமி என்றாலே கோவில்களில் மிளகு தீபம் ஏற்றுவது, பூசணிக்காய் தீபம் ஏற்றுவது, மிக மிக சிறப்பு வாய்ந்த பலன்களை கொடுக்கும். நீங்களும் உங்களால் எந்த விளக்கு போட முடியுமோ அந்த விளக்கை ஏற்றி வையுங்கள்.
அல்லது பூசணிக்காய் தீபம், மிளகு தீபம் 2 தீபங்களுமே உங்களால் போட முடியும் என்றாலும் போடலாம். அது உங்களுடைய சௌகரியம். மேல் சொன்ன முறைப்படி நாளைய தினம் எவரொருவர் கால பைரவரை வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு குரு பகவானின் பார்வையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.