Breaking News :

Sunday, February 23
.

அழுகிய தேங்காய் அபசகுனமா?


பகவானால் படைக்கப்பட்ட முக்கியப் பொருள் தேங்காய்.

 

ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு.

 

கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

 

ஆகவே ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும்,

மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது.

 

இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.


 

தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் & ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வாா்கள்;

ஒரு சிலா் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவா்களையும் பயமுறுத்துவாா்கள்;

ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி.

 

அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி.

ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை, துா்சொப்னங்கள், கண்திருஷ்டி, ரோகம், ஆகியவை அனைத்தும் பிராா்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.

 

முழு கொப்பரையாக இருந்தால்

சுபகாரியம் உண்டாகும்

புத்திர பாக்யம் உண்டாகும்

பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்

பூ இருந்தால்

ரோக நாஸ்தி

எதிர்பாராத வரவு

சொர்ண லாபம்.

 

நீங்கள் உங்களையோ அல்லது இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடி சுபமாகவே நடக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.