திருப்பதியில் பெருமாளைப் பார்த்து அத்தனை ஆழ்வார்களும் உம்மை பாடியுள்ளார்கள் என்று கூற முடியாது. திருவரங்கத்தில் கூறலாம். திவ்யப்ரபந்தங்களை இயற்றிய ஆழ்வார்கள் 11 (சிலர் ஆண்டாளை ஆழ்வார்கள் கணக்கில் சேர்ப்பதில்லை. சேர்த்தால் 12).
தமது குரு சுவாமி நம்மாழ்வாருடன் மதுரகவி ஆழ்வார். இவர்களுள், மதுரகவியாழ்வார் பகவானைப் பாடாது தனது குருவான நம்மாழ்வாரைப் பற்றி மட்டுமே 11 பாசுரங்கள் கொண்ட "கண்ணிநுண் சிறுத்தாம்பு...." என்ற பிரபந்தத்தை இயற்றினார்.
ஏனைய ஆழ்வார்கள் (ஆண்டாள் உட்பட) பல திருத்தலங்களைப் பாடியுள்ளனர். மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற அனைவராலும் பாடப்பெற்ற திருத்தலம் திருவரங்கம் மட்டுமே (மொத்தம் 247 பாசுரங்கள்).
தொண்டரடிப்பொடி ஆழ்வார் தமது பாசுரங்களில் திருவரங்கம் அரங்கநாதரைத் தவிர வேறு எந்த பெருமாளை பற்றியும் பாடவில்லை. எனவே, திருப்பதி அந்த பெருமையை இழந்தது என்றே கூறவேண்டும்.