Breaking News :

Friday, April 04
.

தினமும் பூஜை செய்தால் கிடைப்பது? - திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள்


எனக்கு என்ன கிடைச்சுதுங்கறது முக்கியமில்லடா. நான் ஒரு பொருட்டில்லை. என்ன கிடைக்கும்னு கேள். படிப்படியா விளக்கிச் சொல்றேன்.

தினம் ஒருமணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம் அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு.

காலைல ரெண்டு மணிநேரம், சாயந்தரம் ரெண்டு மணிநேரம் பண்ணினா காதில் இனிமையான சங்கீதம் கேட்கும்.

உடம்பு இறகுபோல லேசா இருக்கும்.
நோய் உபத்திரவாதங்கள் இருக்காது. உணவு கவனமா சாப்பிடத் தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது.   

உணவு குறைஞ்சு உள்ளம் பலமாயிடும்.
கார்த்தாலே மூன்று மணிநேரம், சாயந்தரம் மூன்று மணிநேரம் ஜபம் பண்ணினா, முகத்துல மாறுதல் உண்டாகும். கண் கூர்மையாகும்.

உடம்பிலே இருந்து தேஜஸ்
விசிறி விசிறி அடிக்கும்.  
நாம் சொல்லும் வாக்கு பலிக்கும்...
எட்டு மணிநேரம் ஜபம் பண்ணினா,
நீ வேற மந்திரம் வேற இல்ல.  
நீயே மந்திரமா மாறிடலாம்.  
அதற்கப்புறம் நடக்கறதெல்லாம்
ஆனந்த குதியல் தான்...

எதைப் பார்த்தாலும் சந்தோஷம் தான். பசிக்காது. தூக்கம் வராது.  
யாரையும் அடையாளம் தெரியாது.  
மனசு கட்டுலேயிருந்து விடுபட்டு
ஸ்வாமி கிட்ட நெருக்கமா போயிடலாம்.  

அப்புறம் அதுவே உன்னை இழுத்துண்டு போயிடும். இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய, அந்த சக்தியே கூட்டிண்டு போயிடும்...

நீ உன்னோட கட்டுப்பாட்டில்
இருக்க மாட்டே..
முழுக்க முழுக்க சுவாமி கிட்ட
சரணாகதி ஆயிடுவே.  
அப்ப நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்.

இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமோ? உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும் பகவானா  
பார்த்து பார்த்துக் கொடுப்பார்.

உன் வார்த்தையெல்லாம் கடவுளுடைய வார்த்தை. உன் செய்கையெல்லாம் கடவுளுடைய செய்கை...

எட்டு மணிநேர ஜபத்துக்கப்புறம் என்ன?
எல்லா நேரமும் ஜபம் பண்ணனும்னு தோணிடும். எட்டு இருபத்தி நாலா மாறிடும். அதுல இன்னும் உக்கிரம் வந்துடும்..

மந்த்ர ஜபம் என்பது கற்றுக் கொள்வதில் இல்லை. பூஜை என்பது சொல்லித் தந்து செய்வது அல்ல. உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து அதற்குள் தானே மயங்கிச் சரிதல் வேண்டும். சடங்காக செய்கிறபோதும், எதிர்பார்த்து உட்காரும் போதும் செய்கிற விஷயத்தின் வீரியம் குறைகிறது..

ஸ்வாசம் போல இயல்பாக மாறிய செயல் தான் உன்னத ஆன்ம நிலைக்கு அழைத்துச் செல்கிறது...

ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்...
திரு. பாலகுமாரன் எழுதிய
"தங்கக் கை" புத்தகம்....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.