Breaking News :

Saturday, December 21
.

அன்னை மஹா வராகியை ஜபிக்கும் முறை!


எல்லா மனிதர்களும் அன்னை மஹாவராகியை தினமும் ஜபிக்கலாம்;ஒரே நிபந்தனை;அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;முடியாத பட்சத்தில் முதல் மூன்று ஆண்டுகள் வரையாவது கைவிடவேண்டும்;

பின்வரும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்து வந்தாலே ஒரு ஆண்டுக்குப் பின்னர் 64 வராகி அவதாரங்களில் தாங்கள் எந்த அவதாரத்தைச் சேர்ந்த வம்சாவழியினர் என்பதை அறிந்து கொள்வீர்கள்!!!

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சமஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த மந்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாத்தியார் ஐயா என்பது சிங்கம்புணரி என்ற ஊரில் ஐக்கியமாகி இருக்கும் வராகி சித்தர் முத்துவடுகேசரைக் குறிக்கின்றது;

குரு அருள் இருந்தால் தானே அன்னையின் அருள் கிடைக்கும்!!!

இவைகளை முதல் நாளில் இருந்து ஒரு வாரம் வரை தினமும் 15 நிமிடம் வரையிலும்
இரண்டாவது வாரம் முழுவதும் 30 நிமிடம் வரையிலும்
மூன்றாவது வாரம் முழுவதும் 45 நிமிடம் வரையிலும்
நான்காவது வாரம் முழுவதும் 60 நிமிடம் வரையிலும்
ஐந்தாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 60 நிமிடம் வரை ஜபித்துவிட்டு,வராகி மாலையை ஒரு முறை ஜபிக்க வேண்டும்;

ஆறாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 60 நிமிடமும்,ஒருமுறை வராகி மாலையும்,வராகி 64 போற்றிகள் ஒருமுறையும் ஜபிக்க வேண்டும்;

ஆறாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை இப்படிச் செய்ய வேண்டும்;

ஒரு பச்சைத் துண்டு மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபத்தையும்,இன்னொரு மண் விளக்கில் சுத்தமான பசு நெய் தீபத்தையும் ஏற்றி வைத்து ஜபிக்க வேண்டும்; தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது இரவுப் பொழுதில் அல்லது இரண்டு நேரங்களிலும் இவ்வாறு அமைத்து ஜபிக்கலாம்;

ஜபிக்க ஆரம்பிக்கும் போது வாசமுள்ள பத்தி ஒன்றை பொருத்தி,அன்னையின் படத்திற்கு ஆராதனை ஓம் வடிவில் காட்ட வேண்டும்;

ஒரு மணி நேரம் வரை ஜபிக்க ஆரம்பிக்கும் போது உங்கள் உடல்வெப்பம் அதிகரிக்கும்;எனவே,தினசரி உங்கள் உடல் வெப்பத்தை சமச்சீராக்கும் உணவுகளை சேர்க்கவும்;(சூடான சாதத்தில் பசு நெய் சேர்க்க வேண்டும்;அல்லது இளநீர் அருந்த வேண்டும்; அல்லது அடிக்கடி மோர் சாப்பிட வேண்டும்)

பகல் பொழுது ஆண் தெய்வங்களுக்கு உரியது;இரவுப் பொழுது பெண் தெய்வங்களுக்கு உரியது;

அன்னை மஹாவராகியின் படம் கிடைக்காதவர்கள் இங்கே தரப்பட்டிருக்கும் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்;அதுவும் இயலாதவர்கள் அன்னையின் படம் இல்லாமலேயே தினசரி ஜபம் செய்து வரலாம்;

வெளிமாநிலம்,வெளிநாடுகளில் வசிப்பவர்கள்,மிகுந்த பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருபவர்கள் படம்,தீபம்,பத்தி இல்லாமலும் ஜபித்து வரலாம்;சில மாதங்களுக்குப் பிறகு இவைகள் அனைத்தும் அன்னை மஹாவராகியின் கருணையால் தானாகவே தேடிவரும்;

அடிக்கடி வெளியூர்ப் பயணம்,உடல் நலமின்மை,நெருங்கிய உறவுகளின் துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் தொடர்ந்து ஜபிக்க முடியாமல் போகலாம்;ஆனாலும்,விட்டுவிட்டாவது 150 வாரங்கள் வரை ஜபிக்க வேண்டும்;பெண்கள் மாத விலக்கு நாட்களில் ஜபிக்கக் கூடாது;

இப்படி தொடர்ந்து ஜபித்து வருவதன் மூலமாக,உங்களுக்கு கடந்த காலங்களில் யாராவது மாந்திரீகத் தீமைகள் செய்திருந்தால் அது முழுமையாக விலகிவிடும்;கொடூரமான ஜின் மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்,அதில் இருந்து முழுமையாக விலகி விடுவீர்கள்:

துரோகத்தினால் வேலை அல்லது தொழிலை இழந்திருந்தால் அத்தனையும் திரும்பக் கிடைக்கும்; பணத்தை இழந்திருந்தாலும்,கவுரவத்தை இழந்திருந்தாலும் அனைத்தும் திரும்பக் கிடைத்துவிடும்;

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.