Breaking News :

Thursday, November 21
.

இந்த பரிகாரங்கள் செய்ங்க குடும்பத்தில் பிரச்னையே வராது!


வாஸ்துப் படி வீடு கட்டும் வழக்கம் அதிகரித்து வருகிறது. நீங்கள் என்ன தான் தனி வீட்டு மனை வைத்திருந்தாலும் அதில் வீடு கட்டும்போது முழுக்க முழுக்க வாஸ்து விதிகளைக் கடைப் பிடிப்பது கஷ்டம். நீர்த் தொட்டி (Sump), கழிவு நீர்த்தொட்டி (Septic tank), பைப்புகள் போன்றவற்றை புழங்க வசதியாக கட்டும்போது வாஸ்து விதிகளை முழுமையாக கடைப் பிடிக்க முடிவதில்லை என்பது நிஜம்.

அடுக்கு மாடி வீடுகளை வாஸ்து விதிகளின் படி கட்டுவது அதை விட சிரமம் ஆகும். வாஸ்து குறைபாடுகளுடன் கட்டிய வீட்டிற்கு நீங்கள் எளிய சில பரிகாரங்கள் செய்து ஓரளவுக்கு வாஸ்து குறைகளினால் வரும் தீங்குகளைக் குறைக்கலாம்.

பரிகாரங்கள் இதோ...

கணபதி ஹோமம் பண்ணுங்கள்.
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்கு அல்லது தெற்கு தெருக்குத்து இருந்தால் பிள்ளையார் சிலை வையுங்கள்.

துளசி செடி வையுங்கள்.

தினமும் மறக்காமல் விளக்கேற்றுங்கள்.

குறைபாடுகள் உள்ள இடங்களில் கல் உப்பை வையுங்கள்.

ஈசான்யம் கெட்டிருந்தால் நித்ய மல்லி செடி வையுங்கள்.

வாசல் சரி இல்லையென்றால் கண்ணாடி வையுங்கள்.

'ஓம் நமோ வாஸ்து தேவதையே நமஹ' என்று 27 முறை அல்லது 108 முறை சொல்லுங்கள்.

'ஓம்' ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீடு முழுவதும் ஒலிக்க விடவும்.

 எளிய வாஸ்துப் பொருட்களை வாங்கி வைக்கலாம்.

செப்பு தகடுகளை குறைபாடுகள் உள்ள இடங்களில் பதிக்கலாம்.

வாஸ்து மீன் வளர்க்கலாம்.

தினமும் நவக்ரக வழிபாடு நலம் தரும்.

தினமும் தியானம் செய்யுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.