Breaking News :

Thursday, November 21
.

விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் ஏன்?


விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது பற்றி தத்துவ ரீதியான விள க்கம் சொல்லப்பட்டாலும், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை படைப்பதற்குப் பின்ன ணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

அந்தசம்பவம் கதையாகவும் இருக்கலாம். ஆனால்,அது நமக்கு உணர்த்தும் தத்துவம் தான் முக்கியமானது. `கதைக்கு காலில் லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை’ என்று ஒரு சொல்வழக்கு உண்டு. ஒரு கதைக்குக் காரணம் இருக்கிறதா என்றெ ல்லாம் ஆராயக் கூடாது. அந்தக் கதையில் ஆழமாகப் பொதிந் திருக்கும் அர்த்தம் தான் முக்கியமானது.

இந்தக் கதையில் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை ஏன் படைக்கப்படுகிறது, படைக்கப்படும் கொழுக்கட்டை யாருடைய பசியை தீர்க்கிறது என்பது பற்றிப் பார்ப்போம்.

ஞானபாலி என்பவன் சத்தியமே வடிவான உத்தம அரசன். முழுமுதற் கடவுளான கணபதி யின் தீவிர பக்தன். விநாயகரின் பக்தனாக நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து வந்த போதும், ஒருமுறை பெரும் பஞ்சம் வந்துவிட்ட து. மக்கள் கஷ்டப்பட்டு விடக் கூடாதே என்று பலவகைத் திட்டங்களைத் தீட்டி, அவர்களைக் காப்பாற்றி வந்தான்.

எனினும் பஞ்சம் தொடர்ந்து நீடித்ததால், ராஜகுருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான் யாகத்தின் நடுவே அரசனின் விதி தனது வேலையைத் தொடங்கியது.

ஆம், அந்த வழியே சென்ற மேனகை, ஞானபாலியின் கண்களைக் கவர்ந்தாள். சிற்றின்ப ஆசையால் அரசன் வேள்வியை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து மேனகை யின் பின்னே சென்றான். பின்னே வந்த அரசனை எச்சரித்து விட்டு மேனகை மறைந்தாள்.

ஏமாந்து போன அரசன் ஞானபாலி மீண்டும் யாகம் செய்யும் இடத்துக்கு வந்தான். யாகம் பாதியில் நின்றதால் பெரும் ஆபத்து நேரும் என்று ராஜ குரு எச்சரித்தார். எனவே, மீண்டும் மற்றொரு நாள் யாகத்தைத் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.

அதைக் கண்டுகொள்ளாமல் நின்று போன யாகத்தை தொடங்கிய ஞானபாலி யை அஷ்ட திக் பாலர்கள் தோன்றி சபித்தனர். இதனால் ஒற்றைக் கண் பூதமாக மாறி அலையத் தொடங்கினான் ஞானபாலி.

கண்ணில்பட்ட மனிதர்களை எல்லாம் பிடித்து உண்டான் ஞானபாலி. கொடிய அரக்கனாக மாறி சகல உயிரினங்களை யும் வதைத்தான். தீராத பெரும்பசியால் உயிர்களை எல்லாம் விழுங்கினான். எனினும், முந்தைய பழக்கத்தின் காரண மாக விநாயகப் பெருமானின் வழிபாட்டை மட்டும் தொடர்ந்தான்.

பூமிக்கே பெரும் அச்சுறுத்தலான ஞான பாலியை தேவர்களாலும் அழிக்க முடியவி ல்லை. அவனுக்கு கஜமுகனின் ஆசி இருந்ததே கார ணம் என்று பூமா தேவி அறிந்துகொண்டாள். தன் மக்களைக் காக்க கணபதியை வேண்டி னாள். தன் பக்தனான ஞானபாலிக்கு அருள் செய்யவும், பூவுலகைக் காக்கவும் கணபதி திருவுளம் கொண்டார்.  

வேடனாக உருமாறி, ஞானபாலியை எதிர்க்க வந்தார் கணபதி. காண்பவர் யாவரையும் அழித்துவிடும் பூத ஞானபாலி யால் அந்த வேடனை  ஒன்றும் செய்ய முடியவில்லை. போர் நீண்டது, இறுதியாக வந்து இருப்பவர் கணபதி என்று கண்டுகொண்டான் ஞானபாலி. கண்ணீரோடு விழுந்து வணங்கி, தன்னை ரட்சித்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான்.

தனது பெரும்பசியை போக்குவதுடன், தன்னையும் கணநாதராகிய பிள்ளையார் தம்மோடு வைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். பிறப்பிலா பெருவாழ்வைத் தந்து காக்குமாறு அழுதான், கண்ணீரால் தொழுதான்.
பரம பக்தனான ஞானபாலியை கொல்லவோ, பூமியில் அப்படியே விட்டுச் செல்லவோ அந்த மூல முழுமுதற் கடவுளுக்கு மனம் வரவில்லை. கொடுமையான செயல்கள் புரிந்ததால், சொர் க்கமும் ஞானபாலிக்குச் சாத்தியமில்லை என்று உணர்ந்தார்.

எனவே, அவன் வேண்டியபடியே தன்னுட னேயே அவனை வைத்துக்கொள்ள எண்ணினார். அதே சமயம் அவனது பெரும்பசிக்கும் வழி செய்ய திருவுள்ளம் கொண்ட கணபதி கடவுள், விஸ்வரூப வடிவம் எடுத்து, ஞானபாலியைத் தன் கையால் பிடித்து, அவனை ஒரு கொழுக்க ட்டை வடிவமாக்கி விழுங்கிவிட்டார்.

இப்படியாக கணபதிக் கடவுளின் பக்தனான ஞானபாலி, கொழுக்கட்டை வடிவத்தில் விநா யகப் பெருமானின் வயிற்றில் அமர்ந்து கொண்டான்.

பெறுதற்கரிய இந்தப் பேற்றை பெற்று ஆனந்தம் கொண்டான். தேவர்களும் மக்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். கணநாதரின் ஆணைப்ப டியே ஞானபாலியின் பசியைப் போக்க, அவருக்குக் கொழுக்கட்டை படைக்கவும் ஒப்புக்கொண்டார்கள்.

அன்றிலிருந்து அவருக்குப் படைக்கப்படு ம் கொழுக்கட்டையாவும் ஞானபாலிக்கே போய் சேர்ந்தன. நாமும் இன்று வரை ஞானபாலி யின் நினைவாக கொழுக்கட் டையைச் செய்து படைத்து வருகிறோம்.
 
`ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் பொதித்து, இந்த உடலையே ஆண்டவருக் காக அர்ப்பணிக்கிறோம்’ என்பதே கொழு க்கட்டை யின் தத்துவம். வாழும் காலம் வரை, தன்னை அப்படியே ஒப்படைக்க முடியாது என்பதால், கொழுக்கட்டையின் வாயிலாகச் செய்கிறோம். ஞானபாலியை வைத்து விநாயகப் பெருமான் நம் ஒவ்வொருவரையும் சரணாகதி அடையச் செய்துவிட்டான் என்பதே இந்தக் கதையின் அடிப்படை.

முழுமுதற் கடவுளான பிள்ளையாரை பிடித்துக் கொள்ளுங்கள், மனதுக்குப் பிடித்தவாறே வாழ்க்கை அமைந்துவிடும்.

விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.