விநாயகரை வழிபட நெற்றிப் பொட்டில் குட்டி கொண்டு கீழ்க்கண்ட சுலோகத்தை சொல்வது வழக்கம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே ||
இந்த சுலோகத்தில் வினாயகரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
1. சுக்லாம்பரதர : வெண்மையானஆடை உடுத்தவர்.
2. விஷ்ணும் : எங்கும் நிறைந்தவர்.
3. சசிவர்ணம் ; நிலவு போன்ற ஓளி நிறத்தினர்.
4. சதுர்புஜ : நான்கு கைகள் உள்ளவர்.
5. ப்ரஸன்ன வதனம்: நல்ல மலர்ந்த முகமுள்ளவர்.
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்று க்கும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.
மஹா கணபதியை தியானித்து உச்சந் தலையில் உள்ள அமிருதம் எல்லா நாடிக ளிலும் இறங்கிப் பாய்வதாக எண்ணி வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடது முன் தலையிலும், இடது கையால் வலது முன் தலையிலும் முஷ்டிகளால் மெதுவாகக் குட்டிக் கொள் வது முறை.
விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து காவிரி நதி பெருக்கெடு த்து ஓடுமாறு செய்தார்.
பின் காக்கை வடி வம் நீங்கி அத்தண சிறு வனாய் மாறினார். அவனது தலையில் குட்டுவதற்காக அவனைத் துரத்திச் சென் றார் அகஸ்தியர்.
பின் விநாயகர் தமது உண்மை வடிவில் காட்சியளித்தார். குட்டுவதற்கு ஓங்கிய கையால் தம் நெற்றியில் குட்டிக் கொண் டார் அகஸ்தியர்.
"உமது திருமுன்னர் நெற்றியில் குட்டிக் கொண்டு
வழிபடும் மெய்யன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும்,"
என்று அகஸ்தியர் வேண்டினார்.விநாய கப் பெருமானும் அவ்வாறே செய்வதாக
வாக்களித்தார்,
தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில் முன் தலையின் இருபுறங்களிலும் TEMP LAR LOBE உள்ளது. இந்த இடத்தில் தான் ஞாபகசக்தி யைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் குட்டிக் கொள்வதால் இந்த நாடிகள் தூண்டிவிடப் படுகின்றன.
இதனால் உடம்பில் சுறுசுறுப்பும், உள்எழு ச்சியும் உண்டாகிறது. இதனை மனதில் கொண்டு முன் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டிப்பது வழக்கம்.
நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும் போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாகத் திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல் முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுவர்.
விநாயகா போற்றி...
விக்னேஸ்வரா போற்றி...