Breaking News :

Thursday, November 21
.

புராணத் தொடர்பு விநாயகர்கள்?


விஷம் தீர்த்த விநாயகர் – திருமருகல்

சேந்தனாரின் விலங்கொடித்த விநாயகர் – திருவெண்காடு

குளம் வெட்டிய விநாயகர் – திருப்புன்கூர்

சம்பந்தருக்கு வழிகாட்டிய விநாயகர் – விளநகர்

திரௌபதி பூஜித்த விநாயகர் – திருவாழ்கொளிபுத்தூர்
துணை வந்த விநாயகர் – திருத்துருத்தி மற்றும் திருவாவடுதுறை

கஜமுகாசூரனைக் கொன்ற பாவம் போக
சிவபெருமானை பூஜித்த விநாயகர் – திருச்செங்காட்டங்குடி

அதிசய விநாயகர்கள்

நிறம் மாறும் விநாயகர் – கேரளபுரம் ((நாகர்கோயில் தக்கலை அருகில். 6 மாதங்கள் வெண்மையாகவும், ஆறு மாதங்கள் கருமையாகவும் தோன்றுவார்)

பூ விழுங்கும் விநாயகர் – திருச்சிற்றம்பலம்
(பட்டுக்கோட்டை அருகில் உள்ளது.

நமது வேண்டுதலை நினைத்து இவரின் காதில் உள்ள துவாரத்தில் மல்லிகை, அரளி,, கனகாம்பரம் போன்ற ஏதேனும் ஒரு பூவினைச் செருகி வைத்து விட்டு, திருக்கோயிலை வலம் வந்து பார்த்தால் அந்தப் பூ காதினுள்ளே சென்றிருந்தால் நமது வேண்டுதல் பலிக்கும். இல்லையேல் பலிக்காது)

தேனுறிஞ்சும் விநாயகர் – திருப்புறம்பியம் (தேனாபிஷேகத்தின் போது ஊற்றப்படும் அவ்வளவு தேனையும் – சுமார் 110 லிட்டர் - உறிஞ்சிக்கொள்வார்)
சிவலிங்க வடிவில் விநாயகர் – தீவனூர்.

(திண்டிவனம்-செஞ்சி சாலையில் தீவனூர் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ நெற்குத்தி விநாயகர், சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யுபோது அவரது உருவத்தினை மிகவும் தெளிவாகக் காணலாம்)

ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் (விநாயகர்) – செண்பகபுரம் (திருவாரூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள செண்பகபுரம் (மோகனூர் அஞ்சல், கீவளூர் வட்டம், நாகை மாவட்டம்) என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில். இங்கு ஸ்ரீ விநாயகப் பெருமானே சிவபெருமானாகக் கருதி வழிபடப் படுகிறார்)

ஜடாமுடி விநாயகர் – அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. சொக்கலிங்கபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ படித்துறை விநாயகர் திருக்கோவில்.

இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ விநாயகர் ஜடாமுடியோடு கூடிய வித்தியாசமான திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்)

பெத்தாக்ஷி விநாயகர் – தேனி (தேனி பேருந்து நிலையத்திலிருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

இங்கு மூலவரான ஸ்ரீ பெத்தாக்ஷி விநாயகர் தும்பிக்கையில் பிரம்ம கலசம் தாங்கி வித்தியாசமான திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்)
ஓம் ஸ்ரீ மஹா கணாதிபதயே நமஹ

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.