Breaking News :

Sunday, December 22
.

மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணி?


பாரதியார் கவிதைகள் 
[Bharathiyar Kavidhaigal]
மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது                                                            
ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு                                 
மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார்.

*வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்தபடி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி.

* உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.

*மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

*அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி.

*பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய்.

*கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன்வேட்டைநாய்.

*தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை.

* மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை.

*வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி.

*தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு.

*மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.