Breaking News :

Tuesday, April 15
.

படுக்கையறை பாடங்கள் என்ன?


நாம் அனைவருமே நமது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை படுக்கையறையில் செலவிடுகிறோம். அதாவது படுக்கை அறையில் தூங்கிக் கழிக்கிறோம்.  தூங்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு கட்டமைப்பு பகல் நேரங்களில் உருவாகும் நச்சுத்தன்மை களில் இருந்து விடுபட்டு நோய் எதிர்ப்பு திறனை வளர்த்துக் கொள்கிறது. மிக முக்கியமான இந்த செயல்பாடு தூக்கத்தில் நடைபெறுவதால் படுக்கை அறை மிக சுத்தமாக அமைய வேண்டியது அவசியம். காற்றும், வெளிச்சமும் போதுமான அளவு கிடைப்பது அவசியம். படுக்கையறை சட்டத்திற்காக தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன தெரியுமா? இதோ அந்த பட்டியலைக் கீழே பார்ப்போம். 

 

முதலில் படுக்கை அறையை பாசி அண்டவிடாமல் பராமரிக்க வேண்டும் தினமும் தூங்கி விழித்த உடன் படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும் இதுவே சுத்தத்திற்கு அடையாளம். படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறையை அவ்வப்போது மாற்ற வேண்டியது அவசியம் அப்படி இல்லை என்றால் சுத்தம் தங்காது. படுக்கை அல்லது தலையணை உறையை மாற்ற வடிவிலும் புகைப்பது நன்று வாரத்திற்கு ஒரு முறையாவது குறைப்பது மிகமிக நன்று.

 

 படுக்கையறை ஜன்னல்களில் சுத்தம் காற்றை தரும் விதத்தில் சில வகைச் செடிகளை வைக்கலாம் அதில் இருக்கும் செடிகளை தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் கட்டில் ஜன்னல் காற்றாடி உள்ள தூசிகளை தினமும் செய்ய முடியாவிட்டாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது மிகவும் நன்று.

 

கொசுக்களை விரட்டுவதற்காக பொருள்களை படுக்கை அறைக்குள் பயன்படுத்தும்போது அறையை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

 

கொசுவர்த்தி உபயோகிக்கும் போது உள்ளே படுத்து தூங்குவது நல்லதல்ல. கொசுவர்த்திகள் எரியும்போது படுக்கை அறை கதவு ஜன்னல்களை திறந்து விடுவது நல்லது  படுக்கை அறை கதவு ஜன்னல்களை திறந்து விடுவது நல்லது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொசுவர்த்திகளை அணைத்துவிடுங்கள். அதுவே நல்லது. உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம், இதயநோய் மன அழுத்தம், சர்க்கரை வியாதி உடல் பருமன் என்று பல பிரச்சனைகளை கைப்பற்றி அழைத்துவரும். தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் உறங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு  நாளும்  சராசரியாக ஏழு முறை இரவு தூக்கம் கவலைகளால் பாதிக்கப்படுகிறது இரவில் விழித்திருக்க வைத்திருப்பதில் பணப்பிரச்சனை ஆரோக்கிய அச்சம் வேலையை பற்றி கவலைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன கவலையால் உறக்கத்தை இறந்திருப்பது தமது அன்றாட நலத்தை பாதிப்பதை உணர்த்துவதாக பத்தில் ஏழு பேர் கூறுகிறார்கள்.

 

படுக்கையறையில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பது தான் சரியானது ஏன் இயல்பாகவே இரவில் நம் உடல் வெப்பநிலை தணிக்கிறது இந்நிலையில் படுக்கையறையின் குளுமை நமது உடல் வெப்பநிலை உடன் இணைந்து நல்ல உறக்கத்துக்கு உதவும். படுக்கைக்கு செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன் குளிப்பது நல்லது குளியலுக்குப் பின் உடல் வெப்பநிலை உடனடியாக குறைவதால் தூக்கம் உங்களை தாலாட்ட தொடங்கிவிடும். படுக்கையில் உறக்கத்தை எதிர்நோக்கி எவ்வளவு நேரம் கண்மூடி கிடப்பது சுமார் 20 நிமிடங்கள் எதிர்கொள்ளலாம் என்று கருத்து சொல்கிறார்கள் நிபுணர்கள் உறக்கம் உங்களை தழுவுவதற்கு அவ்வளவு நேரம் மட்டும் அனுமதிக்கலாம். அதற்குப் பின்பும் உறக்கம் வரவில்லை எனில் குறைந்த ஒளியில் மெல்லிசை கேட்பது ஏதாவது புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

 

காபி, செயற்கை குளிர்பானங்கள், டீ, சாக்லேட் ஆகியவற்றின் தாக்கம் முழுமையாக நீங்குவதற்கு சராசரியாக எட்டு மணி நேரம் ஆகிறது. எனவே நீங்கள் மாலையில் நேரம் கடந்து பருகும் ஒரு காபி இரவில் உங்கள் தூக்கத்தில் குறுக்கிட கூடும் பிற்பகல் 2 மணிக்கு மேல் காபி பருகுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் படுக்கையில் உங்களுடைய வியர்வை என்னை மட்டுமல்ல இறந்த சரும செல்களும் படுகின்றன இந்த செல்கள் கண்களுக்கு தெரியாது. நுண்ணுயிரிகளுக்கு நல்ல உணவாகின்றன இந்த நுண்ணுயிரிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் தேசிய ஒழுக்கவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி படுக்கை விரிப்பு சுத்தமாக இருக்கும்போது தங்களால் ஆழ்ந்து உறங்கும் முடிவதாக 71 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கின்றனர் எனவே ஏழு நாட்களுக்கு ஒருமுறையாவது வாரம் ஒருதடவை படுக்கை விரிப்பு தலையணை உறைகளை துவைத்து உலர்த்தி பயன்படுவதை வழக்கமாக வைத்திருங்கள். வெறும் ஆறு நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது 68 சதவீதம் அளவுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது என்கிறது இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வு எனவே நூல் வாசிப்பது என்பது உறக்கத்திற்கு முன் செய்யக்கூடிய சரியான செயல் அது நம் உறக்கத்தைப் பாதிக்கும் கவலைகளில் இருந்து திசை திருப்புகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.