Breaking News :

Friday, January 03
.

பெத்தவங்க EGOவை பசங்க மேல காட்டினா என்னாகும்?


புருஷன் பொண்டாட்டி சண்டைல மூணாவது மனுஷங்க தலையிட்டு பஞ்சாயத்து செஞ்சா என்ன ஆகும். பெத்தவங்க EGOவை பசங்க வாழ்க்கையில காட்டினா என்ன ஆகும்னு ஒரு நல்ல உதாரணம் இது.

 

சீமந்தம் முடிஞ்சி அம்மா வீட்டுக்கு வந்த பொண்ணு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியில வந்து பாத்தா புருஷன்.

 

மாமியார் மருமகள் சண்டை. இதோட நான் புருஷன் வீட்டுக்கு போக மாட்டேன். தனி குடித்தனம் வெச்சா போறேன் இல்லனா நான் அப்பா அம்மா கூடவே இருக்கேன்னு குழந்தை பிறந்த கையோட சொல்லிச்சி பொண்ணு.

இது பொண்ணா சொல்லிச்சா இல்ல ஆத்தாகாரி வேலையானு தெரியல.

 

குழந்தை பிறந்து 3 மாசம் கழிச்சி பொண்ணு வீட்ல இருந்து பையன் வீட்ல போயி பேசினாங்க சில சொந்தக்காரங்க.

பையனோட தாய்மாமன் ரொம்ப ஏகுறி இருக்கான். சண்டை பெருசா ஆகிடிச்சி.

 

ஒரு 6 மாசம் கழிச்சி

இப்படியே இருந்தா எப்படினு பையன் வீட்டு தரப்புல இருந்து சில பேர் போயி பொண்ணு வீட்ல பேசி இருக்காங்க. பேசி சுமூகம வரும் போது  பொண்ணோட சித்தப்பா ஓவரா சீன் போட்டு இருக்கார் மறுபடியும் பெரிய சண்டை இனிமே ஒத்து வராதுனு அளவுக்கு போயிடிச்சி.

 

2 வருஷம் ஓடிடிச்சி இப்படியே. 2 வருஷமா பெத்த புள்ளைய கூட பாக்க வரமா இருந்து இருக்கான் பையன். அதுக்கு பிறகு 2 குடும்பத்துக்கும் சொந்தக்காரர் பெரியவர் ஒருத்தர் நான் பேசி பாக்குறேன்னு 2 குடும்பத்து கிட்டயும் பேசி இருக்கார்.

கொஞ்ச நேரம் காரசாரமான விவாதம் போயி ஒரு வழியா பையன் வீட்லயும் தனி குடித்தனம் வைக்கிறோம்னு சொல்லி சுமூகமா பேசி முடிஞ்சி இருக்கு.

 

இந்த 2 வருஷத்துல பொண்ணுக்கும் புருஷன் வந்து கூப்பிட்டா போயிடலாம் அப்படினு ஒரு மனநிலைக்கு வந்துடிச்சி. பையனுக்கும் பொண்டாட்டி வரேன்னு சொல்லிட்டா போயி கூட்டிகிட்டு வந்துடலாம்னு ஒரு மனநிலைக்கு வந்துட்டான்.

புருஷன் வந்து கூப்பிட்டா போலாம்னு பொன்னும், பொண்டாட்டி வரேன் சொல்லிட்டா போயி கூட்டிகிட்டு வரலாம்னு பையனும் காத்துகிட்டு இருந்து இருக்காங்க.

 

தூது போன பெரியவர் பையன் வீட்ல பேசி

ஒரு நல்ல நாள் பாத்து பொண்ணை போயி கூட்டிகிட்டு வரலாம்னு பேசி முடிச்சி இருக்கார்.

 

பொண்ணு வீட்லயும் போயி அடுத்த வாரம் பையன் வீட்ல இருந்து 4 பேர் வந்து பொண்ணை கூட்டிகிட்டு போறாங்கனு சொல்லி இருக்கார் அந்த பெரியவர்.

 

அதுக்கு பொண்ணோட அப்பா சொல்லி இருக்கார் மாப்பிளை வந்து தான் என் பொண்ணை கூடிக்கிட்டு போகணும் இல்லனா நான் பொண்ணை அனுப்ப மாட்டேன்னு சொல்லி இருக்கார்.

 

பெரியவர் பையன் வீட்ல போயி பொண்ணோட அப்பா இது மாதிரி சொல்றார். பையன் வந்து கூட்டிகிட்டு போனா தான் பொண்ணை அனுப்புவேன்னு சொல்றார்னு சொல்லி இருக்கார். பையனும் சரி நான் போயி கூட்டிகிட்டு வரேன்னு சொல்லி இருக்கான்.

 

இன்னும் 3 நாள்ல பையன் போயி கூட்டிகிட்டு வர போறான் பொண்டாட்டிய. அந்த டைம்ல ஏதோ ஒரு சொந்தக்காரர் கல்யாண பத்திரிக்கை வைக்க பொண்ணு வீட்டுக்கு போயி இருக்கார். அந்த ஆளு கிட்ட பொண்ணோட அப்பா சொல்லி இருக்கார். என் பொண்ணை கூப்பிட இங்க வருவான்ல அவன் நல்லா நாக்கை புடுங்குற மாதிரி 4 வார்த்தை கேட்டு தான் அனுப்புவேன்னு சொல்லி இருக்கார்.

 

இந்த விஷயம் பையன் வீட்டுக்கு போயி இருக்கு.

நம்ம பொண்டாட்டிய கூப்பிட போன நம்ம கிட்ட சண்டை போட பிளான் பண்ணி வெச்சி இருக்கார் மாமனார்னு தெரிஞ்சி பையன் பொண்டாட்டிய கூப்பிட போகவே இல்லை.

 

இதோ இன்னைக்கு அந்த குழந்தைக்கு 11வது பிறந்த நாளாம் பா ........சுட்டதில் மிகவும் கடுப்பேத்தியது..... இந்த மூதேவிங்களுக்கு கல்யாணம் ஒரு கேடு எவன் தாலியவாச்சும் அறுக்கதுக்கே குடும்பமா அலையுங்க போல....

 

புருஷன் பொண்டாட்டி ஆகியாச்சா  நம்ம சங்கதிகள் குள்ள அப்பன் ஆத்தாள வுட்டா இப்படி தான். அதுங்க வெச்சு செஞ்சு புட்டு போயிரும்

 எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் நாம் தொந்தரவா இருக்க வேண்டாம் னு நினைக்ஙற பெரியவங்கள இந்த நாதாரிங்களால புரிஞ்சுக்க முடியாது ...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.