அவன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது அவனோடு சேர்த்து 15 பேர் லிப்டுக்காக காத்து நின்றார்கள்.
“காலையிலிருந்து ஒரே புழுக்கம் அனேகமாக மழை வரலாம்” என்றார் ஒருவர் ஆருடமாக.”எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் நிற்கலாம்” என்றார்மற்றொருவர். ” சரி படிக்கட்டு வழியாகவே இறங்கலாம் ” என்ற முடிவுக்கு வந்த அவன் மெதுவாக இறங்கத்தொடங்கினான். படிகட்டு அதிகம் பயன் படுத்தப்படாததால் ஆங்காங்கு எச்சி துப்பல்களும் வக்கிர கிறுக்கல்கலும் நிரம்பி வழிந்தன. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே படி இறங்கினான்..சுவற்றுக்கிறுக்களில் இருந்த அந்தபடம் அவனை ஈர்ததது. ”மல்லிகா “ என்று எழுதி இதயத்தை அம்பு துளைப்பதாக அந்தப்படம் இருந்தது, அந்தப்பெயர் பார்த்ததுமே அவனுள் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தான். பெருமூச்சாக வெளிப்பட்டது அவன் சிந்தனை. ”சார் கரண்ட் போச்சு ,நல்லவேளை படியில் வந்தீங்க “ என்று சொன்னபடி தாண்டிச்சென்றான். இளைஞன் ஒருவன்.
.இவன் படி இறங்கி வாசல் வந்தபோது பலர் மேலே செல்லாமல் நின்றிருந்தனர். வெளியெ மழை ஹோ வென கொட்டிக்கொண்டிருந்தது.
எப்படியும் போகமுடியாது என்று தோன்றியது .
அப்போது படபட வென்று மின்னலுடன் இடி இடித்தது. அவளும் இப்படி ஒர் மின்னலாகத்தான் வாழ்க்கையில் நுழைந்தாள். இந்த அலுவலகத்தில் இவன் சேர்ந்த புதிது. இந்த இடத்தில் தான் அவளைச் சந்தித்தான்.அவளும் இதே கட்டிடத்தில்தான் வேலை பார்பதாகச்சொன்னாள். அன்று பணி அதிகமானதால் இவன் லேட், அவள் தனியாக நின்று கொண்டிருந்தாள். அவள்தான் அழைத்தாள்.” சார் நீங்க எது வரைக்கும் பொறீங்க “ என்றாள்.இவன் சொன்னான், ”சார் நானும் அந்த ஏரியா தான் சார் , மழைவேற வரும்போல இருக்கு ஆட்டோ ல போகலாம் சார்” என்றாள். இவன் சட்டைப்பையை தடவ அவள் “ சார் காசு நானே தர்றேன் “ என்றாள். இவன் யோசிக்க “ சார் தனியா போக பயமா இருக்கு நீங்க வந்தா பயமில்லாம போகலாம்”என்றாள். இவன் “நான் பாதி குடுத்திடுவேன் ஆனா நாளை தான் தரமுடியும் “ என்றான்.
. பொகும்போது மழை கொட்ட த்தொடங்கியது. சாலைகள் சரியாக தெரியவில்லை . ஒரு இடத்தில் வந்ததும் ஆட்டோவை நிறுத்தி இறங்கி கொண்டாள். ஆட்டோ காரரிடம் பணம் கொடுத்துவிட்டு ”சாரை அவுங்க வீட்டுல இறக்கி விட்டுங்க சார் தேங்ஸ்’ என்று சொல்லிவிட்டு தலையை போர்த்திக்கொண்டு சந்துக்குள் ஓடினாள். அவள் இறங்கிய பின்னும் அவள் வாசம் இவனோடு பயணித்தது.
மறுநாள் மாலை பணி முடிந்து வெளியெ வந்தபோது அவள் நின்றிருந்தாள். இவன் “ இந்தாங்க பாதி பணம்” என்று கொடுத்தபோது மறுத்தாள்..அப்போது அவள் “வேணும்னா காபி குடிக்கலாம் நீங்க பணம் கொடுங்க “ என்றாள். அருகிலிருந்த ஒட்டலுக்கு போகும்போது அவளுடன் சேர்ந்து நடப்பது பெருமையாக ட்ருந்தது.எல்லோரும் இவர்களையே பார்பதாக தோன்றியது, காபி குடிக்கும் போது இவன் கைகளில் இருந்த வைரமுத்து கவிதை புத்தகம் பார்த்து “உங்களுக்கு கவிதை பிடிக்குமா “ என்றாள். ஓ! நான் கவிதை வெறியன்” என்றான். ”நானும்தான்” என்றாள்.அதன் பின் சந்திப்புகள் வளர்ந்தன.ஒட்டல் பில்லில் ஒணர் மாடி கட்டினான்,இவன் கனவில் அவளுடனே வாழத்தொடங்கினான்,கவிதை பரிமாற்றங்கள் கவிதை திரைப்படம் நல்ல சொற்பொழிவு புத்தகக்கண்காட்சி இலக்கியக்கூட்டம் நூல்வெளியீடு என்று சந்திப்புகள் விரிந்தன.
அப்போது திடீரென்று இடி இடித்த சப்தத்தில் இவன் நிலைக்கு வந்தான், அவளின் திருமணச்செய்தி இடி யாகதான் வந்தது. கேட்டபோது:” அம்மா தற்கொலை செய்வதாக சொல்லும்போது என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை ”என்று சாதரணமாகச்சொல்லி இவனை ரணமாக்கினாள். இவன் அதிர்ந்துபோனான் அவளின் திருமணத்துக்குதாடியுடன் போனான் ,கிப்ட்கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டான் எங்க ஆபீஸ்ல வேலைசெய்றவர் என்று கணவுனுக்கு அறிமுகம் செய்தால் சிரித்தமுகத்துடன், அந்தமுகபாவனை சகிக்கவில்லை இவனுக்கு.
,தாடி வைத்து பல நாள் அலைந்தான். அம்மாதான் தேடிபிடித்து இவன் மனைவியை திருமணம் செய்து வைத்தாள். அதன் பின் வாழ்க்கை ஓடுகிறது.
மழை நின்று விட்டது. வரும்போது இருமல் மருந்து மனைவி வாங்கி வரச்சொன்னது நினைவு வர நடக்கத்தொடங்கினான் இவன். மேகங்கள் வடிவம் மாறி வானத்தில் ஒடதொடங்கின ......இவனும் தான்.
நன்றி: அ.முத்துவிஜயன்.