Breaking News :

Tuesday, April 15
.

கல்யாணம் பண்ண போகும் ஆண்களுக்கு ..


பள்ளியறையில் மட்டுமல்ல 

சமையலறையிலும் 

அவளுக்கு துணை கொடு ..

 

மாதத்தில் மூன்று நாட்கள் 

மனைவிக்கு தாயாகு ..

மற்றைய நாள் எல்லாம் சேயாகு..

 

அவள் ஆடைகளை 

சலவை செய்வது 

அவமானம் அல்ல ..

நீ வழங்கும் சமாதானம் ..

 

இரவில் தாமதித்து 

இல்லம் செல்வதை 

இயன்றவரை குறைத்திடு ..

 

இயலாத நிலையில் அவள் 

இருந்திட கண்டாலே 

உறவு தனை தவிர்த்திடு..

 

சின்ன சின்ன சண்டைகள் 

தினந்தோறும் போட்டு கொள் 

சினம் கூடி பெரும் சண்டை 

வந்திடாமல் பார்த்து கொள் ..

 

அடிக்கடி உறவு வைத்தால் 

அலுத்து போய் விடும் 

அவ்வப்போது உறவு கொண்டால் 

ஆனந்தம் பெருகிடும்..

 

அவள் கர்ப்பம் சுமக்கயில் 

நீ அவளை சுமந்திடு...

அவள் வேலையில் அரைவாசி

உன் கையில் எடுத்திடு ..

 

சில நாளில் காலை வரை 

அவள் அழகாய் தூங்கட்டும் ..

அவள் படுக்கை அறை சென்று 

உன் கை தேநீர் வழங்கட்டும் ..

 

உறவு முடிந்த பின்னே 

உன் பாட்டில் தூங்காதே ..

உன்னவள் உன் மார்பில் தூங்க 

ஓரிடம் கொடுக்க தவறாதே ..

 

தாமதித்து வீடு வந்தால் 

தகுந்த காரணம் சொல் ...

தப்பு உன்னில் இருந்தாலே 

மன்னிப்பு கேட்டு கொள் ..

 

நோயிலே அவள் வீழ்ந்ததால் 

பாயாகி விடு ..

நோவென்று அவள் கண்டால் 

தாயாகி விடு ..

 

உன்னாலே அவள் 

வடிக்கின்ற கண்ணீர் 

ஆனந்த கண்ணீராக இருக்கட்டும் ..

 

ஆத்திரம் கூடினால் 

அழுது தொலைத்து விடு ..

அவளை அடிக்கும் பழக்கமதை 

அறவே வெறுத்து விடு ..

 

அவள் ஒரு குற்றம் செய்தால் 

அனைத்து புரிய வை ..

அன்னையாக நீ மாறி 

அவளை திருந்த வை ...

 

அவளின் நட்புகளை 

அவள் தொடர அனுமதி ..

 

தலை நரைக்கும் காலத்திலும் 

சேர்ந்தே உறங்கிடு..

சாகபோகும் நேரத்திலும் 

அவள் கை பிடித்து விடு ..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.