சரவணனின் ’தி லெஜெண்ட்’ - பாடலை வெளியிட்ட மணிரத்னம், ராஜமெளலி

By Senthil

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, “தி லெஜெண்ட்” என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். 

இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார். இவருக்கு ஜோடியாக  பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார். ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க கனல் அரசு ஃபைட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின்  முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘தி லெஜெண்ட்’ என்று தலைப்பிட்டுள்ளதால் மணிரத்னம், ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோரை வைத்து பாடலை வெளியிட வைத்துள்ளது படக்குழு. பா.விஜய் எழுதியுள்ள ’மொசலோ மொசலு’ என்று துவங்கும் பாடலில் ஸ்டைலிஷாக நடனம் ஆடி கவனம் ஈர்க்கிறார் சரவணன். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே கமெண்ட்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார்கள் ரசிகர்கள். 

.
மேலும்