மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பற்றி தெரியாத தகவல்

By News Room

சாமி-1 படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடந்து வந்தது.

"சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவேளா?" வெள்ளந்தியா எங்கள் தெருவில் ஒருவர் நடிகர் விவேக்கிடம் கேட்டார்.

அட, அவ்வளவு தானே? வாங்க போவோம் என்று அடுத்த தெருவிலிருந்து கிளம்பி விட்டார்.

கூப்பிட்டவருக்கு குப்புனு வேர்த்து விட்டது. ஏனெனில் வந்தவரை அமர வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாத நிலை. தினமும் போண்டா, பஜ்ஜி செய்து ஊரெங்கும் விற்று வருவது தான் அவர் தொழில்.

சகஜமாக அவர் வீட்டில் இருந்த ஒரு காலி எண்ணெய் டின்னில் அமர்ந்து கொண்டு ஒரு காபியும், ரெண்டு பஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு ஆட்டொகிராப் போட்டு விட்டு சென்றுவிடவில்லை.

"வறுமையிலும் செம்மையாக உங்கள் விருந்தோம்பல் பண்புக்கு நான் விசிறியாகி விட்டேன், உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?" என்று அழைத்தவருடன் ஒரு போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்த நாட்களில் படப்பிடிப்பு குழுவினருக்கும் சிற்றுண்டி அளிக்க இவருக்கு காண்டிராக்ட் வாங்கி தந்தார்.

சினிமாவுலகில் எந்த வலுவான பின்புலமும் இல்லாத சாமானியர்களும் திறமையிருந்தால் நுழைய முடியும், தாக்கு பிடித்து வெற்றி பெறலாம் என்று இன்னமும் துளிர் விட்டுக் கொண்டு இருக்கும் நம்பிக்கை விதையை விவேக் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் விதைத்தவர்.இவர் தான்....

.
மேலும்