விக்ரம் வெற்றி விழா- கறி விருந்து வைத்த கமல்ஹாசன்

By Senthil

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இப்படத்தில் விஜய்சேதுபதி உட்ப ஏராளமான நட்சத்திரபட்டாளமே நடித்திருந்தது. இப்படம் வெளியிட்ட அனைத்து இடங்களில் ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

மேலும், ஒரு தமிழ் படம் மற்ற மாநிலங்களில் அமோக வெற்றிபெறுவது இதுவே முதன்முறையாகும். 

இதனால் லோகேஷ், அவரது உதவி இயக்குநர்கள், சூர்யா உள்ளிட்டோருக்கு கமல் ஹாசன் பரிசளித்து கௌரவித்தார். படத்தை பார்த்த சிரஞ்சீவியும் கமலையும், லோகேஷையும் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து சிறப்பித்தார்.

இந்த விழாவில் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா முடிந்த பிறகு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கமல் ஏற்பாட்டின்பேரில் விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் சைவம், அசைவம் என இரண்டு  வகைகளிலும் பரிமாறப்பட்டது. 

இப்படங்கள் தான் தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

.
மேலும்