தேவையானவை:
இறால் - 1 கிலோ உருளைக்கிழங்கு - 200 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் தயிர் - 1 டேபிள்ஸ்பூன் சில்லி பொடி - 2 + 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் சீரக சோம்புத்தூள் - 1 டீஸ்பூன் (அல்லது தலா அரைடீஸ்பூன்) மல்லி புதினா நறுக்கியது - கொஞ்சம் பச்சை மிளகாய் - 2 தக்காளி - 2 +1 மீடியம் சைஸ் வெங்காயம் - 2 மீடியம் சைஸ் தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் +3 முந்திரி - பேஸ்ட் எண்ணெய் - 3+1 டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு
செய்முறை இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து மேற்பக்கம் லேசாக கீறி கருப்பு அழுக்கு போன்ற பகுதியை எடுத்து,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துண்டுகளாக்கி வைக்கவும். சுத்தம் செய்து தயார் செய்த இறாலுடன் 2 டீஸ்பூன் சில்லி பொடி ,இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்,
தயிர் ,சிறிது உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் விட்டு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.வதக்கவும்.நறுக்கிய தக்காளி இரண்டு ,மல்லி புதினா,பச்சை மிளகாய், சிறிது தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.நன்கு தக்காளி வெங்காயம் மசிந்து வரும் பொழுது மசாலா தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.ரெடி இறாலில் பாதியை சேர்த்து வதக்கவும். இறால் வெந்து வரும் பொழுது வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.பிரட்டவும்
அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட் கெட்டித்தனமைக்கு தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு சிம்மில் வைத்து எண்ணெய் மேல் வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான இறால் கிரேவி ரெடி.