திருவையாறு அசோகா அல்வா செய்வது எப்படி?

By News Room

சம்பா கோதுமை - 1 கப் பாசிப் பருப்பு - 1 கப் சர்க்கரை - 3 கப் நெய் - தேவையான அளவு முந்திரி - 10

கோதுமை, பாசிப் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளுங்கள். அவற்றை நெய் விட்டு நன்றாக வறுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அடி கனமாக உள்ள பாத்திரத்தில் ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் விட்டு நன்றாகக் கொதிக்கவையுங்கள். மாவு வகைகளைக் கொதிக்கும் தண்ணீரில் சீராகக் கொட்டிக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்தக் கலவை வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறி நெய்யை ஊற்றுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்து, ஊற்றிய நெய் மேலே வரும்வரை கிளறிவிட்டு இறக்கிவிடுங்கள். சிவப்பு நிறம் வர வேண்டும் என்றால் கொஞ்சம் கேசரி பவுடரைச் சேர்த்துக்கொள்ளலாம்.

முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் திருவையாறு அசோகா அல்வா தயார்.

.
மேலும்