கம்யூட்டர் வேலை....உடல் வலி...எடை அதிகரிப்பு

By Senthil

உங்கள் நோக்கம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற பயிற்சிகள் அல்லது உடல் செயல்பாடுகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதற்காக ஒரு நிலையான பயிற்சி வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு எந்த நாட்களில் நிறைய ஃப்ரீ டைம் இருக்கிறதோ அந்த நாட்களில் 30 நிமிடங்கள் வரை ஒர்க் அவுட்களில் ஈடுபடலாம்.

இல்லையெனில் விரைவாக அதிக தீவிர இடைவெளி பயிற்சி  15 நிமிடங்கள் ஈடுபடலாம். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வாக்கிங் அல்லது ஜாகிங் செய்வது கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவும். குறிப்பாக ஜிம்மிங் பற்றி சொல்வதென்றால் ஆரோக்கியமாக இருக்க 2 நாட்கள் வலிமை பயிற்சியும் , 2 நாட்கள் கார்டியோவும் (cardio) செய்வது போதுமானது.

உடல் எடையை குறைப்பது தான் உங்கள் முக்கிய நோக்கம் என்றால் உங்கள் எடையிழப்பு இலக்கை மனதில் வைத்து ஒர்க் அவுட்களில் வழக்கமாக ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். துவக்கத்தில் நாளொன்றுக்கு சீரான இடைவெளியில் 3 முறை வரை ஒர்க் அவுட்களில் ஈடுபடலாம். ஒரு மாதத்திற்குப் பின் இதை 5 முறை ஆக்கலாம்.

உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தசைகளை கட்டமைப்பது உங்கள் நோக்கம் என்றால் வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் ஒர்க் அவுட்கள் செய்வது போதுமானது. இருப்பினும் இதற்கான ஒர்க் அவுட்கள் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

.
மேலும்