கணவன் மனைவி இன்பத்தில் நிலைக்க?

By News Room

கலவியிலும் தியானத்திலும் மூன்று செயல்கள் நடைபெறுகிறது 

 

கலவியில் கணவன்/மனைவி இணையும் நேரத்தில் அதாவது எப்போது அவர்களுக்கு கலவி எண்ணம் உருவாகி எப்போது முடிகிறதோ அப்போது வரை அவர்கள் காலம் அல்லது நேரம் என்ற காலகட்டத்தை கடந்து செல்கிறார்கள் 

 

இதில் கலவியில் சிறந்த விளங்கும் தம்பதியினர் கலவி இப்போது தான் ஆரம்பித்த மாதிரி உணர்வார்கள் ஆனால் நடு இரவை அடைந்து இருப்பார்கள் 

 

பல மணிநேரங்கள் சில வினாடிகள் போல் தோன்றியிருக்கும் 

 

அதுபோல் தியானத்தில் பல வருடங்கள் தியானத்தில் பயிற்சி மேற்கொண்டவர்கள் இதே அனுபவத்தை பெற்றியிருப்பார்கள் 

 

சில மனிநேரங்கள் தியானத்தில் இருப்பார்கள் ஆனால் பாதி நாட்களை கடந்திருப்பார்கள் 

 

ஒரு சிலருக்கு நாட்கணக்கில் போனது கூட சில வினாடிகள் போல் தெரியும் 

 

ஆனால் சாமானிய மனிதனால் இந்த தியான அனுபவத்தை பெறஇயலாது 

 

ஆனால் கலவியில் சாமானியன் கூட இந்த நிலையை தொட்டு செல்ல முடியும் 

 

அதேபோல் இரண்டாம் நிலை, கலவியில் நான் ஒரு பணக்காரன், நான் ஒரு ஏழை, நான் அதிகாரம் உள்ளவன், நான் அடிமையானவன் என்ற எந்த ஒரு அடையாளமும் கலவியில் இருக்கும் போது அவர்களால் அந்த எண்ணத்தை கொண்டுவரமுடியாது 

 

கலவி என்னும் பேராற்றலின் குழந்தையாக அவர்களை மாற்றிவிடும் கலவி நேரம், 

 

அதே போல் தியானத்தில் நான் என்ற அகந்தை அழிந்துவிடும் 

 

நான் என்ற அகந்தை எந்த செயல்களில் எல்லாம் மறைகிறதோ அப்போது இந்த பிரபஞ்ச கட்டுப்பாட்டிற்குள் வருவீர்கள், பிரபஞ்ச கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் அங்கு இன்பம் மட்டுமே உள்ளது 

 

மூன்றாம் நிலை, தியானத்திலும், கலவியிலும் இயற்கைஉடன் இணைவது, அதாவது ஆழந்த தியானத்திலும், கலவியின் உச்சத்திலும் உங்கள் உடல் என்ற ஒன்று மறைகிறது 

 

இயற்கையின் இன்பத்தில் இயற்கை என்னும் பேராற்றலின் சிறு துளியாக இருக்கீர்கள் 

 

அந்த உணர்வில் பசி, கோவம், வலி, வேதனை வேறு எந்த உணர்வும் இருப்பது இல்லை 

 

அப்போது இயற்கையுடன் இணைந்து அதன் பேராற்றலை உங்களால் உணரமுடியும்.  

 

எவ்வளவு தூரம் கணவன் மனைவியின் கலவி இந்த இன்பத்தில் நிலைத்து இருக்கும் போது அவர்களின் அந்நியோன்யம் அதிகரிக்கும்

 

எவ்வளவு தூரம் நீங்கள் இந்த கலவியில் உச்சத்தில் பயணம் செய்கிறீர்களோ அவ்வளவு தூரம் இறைமையின் சக்தியை உணர ஒரு வாய்ப்பாக கலவி அமைகிறது 

 

ஆனால் கலவிக்கு உங்களுக்கு ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தேவை படுகிறது 

 

தியானத்தில் நீங்கள் மட்டும் பங்கு பெரும் செயல் 

 

தியானத்தின் போது கலவியை கொண்டு செல்வது இயலாது 

 

ஆனால் கலவியை நீங்கள் தியானமாக இணைக்க முடியும் அது சிவசக்தி வடிவம்.  

 

கலவியின் பேராற்றலை உணர்த்தவே லிங்கவடிவம் அந்த ஆற்றலே இந்த பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் சக்தி 

 

ஆனால் இத்தகைய இன்பத்தை அனுபவத்திற்கு கொண்டுவராதவர்களே கலவியை ஒரு பாவ செயல் 

 

கலவியில் குறைவான இன்பத்தை பெற்றவர்கள் மட்டும் தான் அது ஒரு சிற்றின்பம் என்பார்கள் 

 

இங்கு பலதார உறவு பற்றி பேசுவது இல்லை, பலதார உறவு முடிவில் உடல் நோய்கள் பலவந்து இறக்கவே நேரிடும்

.
மேலும்