முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?

By News Room

தேவையான பொருட்கள்

 

1 கப் இட்லி அரிசி

1/2 கப் கடலைப்பருப்பு

1/4 கப் உளுத்தம்பருப்பு

2 பச்சை மிளகாய்

10 மிளகாய் வற்றல்

1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

1 கப் முருங்கைக்கீரை இலைகள்

சிறிது கறிவேப்பிலை

1 வெங்காயம்

தேங்காய் எண்ணெய்

உப்பு தேவையான அளவு

 

செய்முறை

 

ஒரு பாத்திரத்தில் அரிசி, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். 

 

ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். ரொம்ப நைசாகவும் இல்லாமல் கொர கொரப்பாகவும் இல்லாமல் நடுத்தரமான பதத்தில் அரைக்கவும். 

 

அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் முருங்கைக்கீரை இலைகளை சேர்த்து கலந்து கொள்ளவும். 

 

மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும். இரும்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் காயவைத்து லேசாக எண்ணெய் தடவி விட்டு 2 கரண்டி மாவில் மெல்லிய அடைகளாக விடவும். அடையை சுற்றி தேங்காய் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக மாறியதும் திருப்பிப் போட்டு மேலும் சில நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

.
மேலும்