ஆண்மை குறைபாடு போக்குமா முட்டைகோஸ்?

By News Room

சர்க்கரை நோய் :

நம் உடலில் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதில் முட்டைகோஸ் முக்கியப்பாங்காற்றுகிறது. இதிலிருக்கும் பொட்டாசியம் அதற்கு பெரிதும் உதவிடும்.

அதோடு இதிலிருக்கும் மினரல்ஸ் ஸ்ட்ரஸ் மற்றும் டென்சனை குறைக்கும் காரணியாகவும் இருக்கிறது.

அபரிமிதமான நார்சத்து அடங்கியுள்ளது. இது செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

உடல் அழற்சி : உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

கண் பார்வை : கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

நார்ச்சத்து : இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

அல்சர் : அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எடை குறைவு : எடையைக் குறைக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால். முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைப்பதுடன், தொப்பை வருவதையும் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி : முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள க்ளுக்கோஸினோலேட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும். இதனால் பல்வேறு நோய்க்கிருமி தாக்குதல்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

லாக்டிக் அமிலம் : முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

செரிமானம் : முட்டைக்கோஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.

பற்கள் மற்றும் எலும்புகள் : இதில் கால்சியம் மற்றும் விட்டமின் கே இருக்கிறது. இவை நம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதோடு இதிலிருக்கும் சத்துக்கள் நம் தசைகளையும் நரம்புகளையும் வலுவாக்குகிறது. விட்டமின் கே ரத்தம் உரைதலை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் : முட்டைகோஸில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு கப் நிறைய முட்டைகோஸ் சாப்பிட்டாலே உங்களுக்கு ஒரு நாளில் தேவைப்படுகிற விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி ஆகியவை ஐம்பது சதவீதம் கிடைத்துவிடும்.இது நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.

கர்ப்பமான பெண்கள் : கர்ப்பமான பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அது முட்டைகோஸில் நிறைந்திருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் அதிகமாக சுரக்கவும் இந்த காயை தொடர்ந்து சேர்த்துக் கொள்ளலாம்.

சருமம் : முட்டைகோஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகுந்த பலன் அளிக்கக்கூடியது. முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

ஆண்ட்டி ஏஜிங் : முட்டை கோஸை தொடர்ந்து எடுத்து வந்தால் நம் சருமம் சுருக்கமடைந்து வயதான தோற்றம் அடைவதை தடுக்க முடியும். இதில் அதிகப்படியாக விட்டமின் சி இருப்பதால் இவை நம் சருமம் இளமையாக இருக்க உதவிடும்.சருமத்தில் இருக்கும் செல்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பருக்கள் : இயற்கையாகவே அழகான மினரல் என்று சொன்னால் அது சல்ஃபர் தான். இது சருமத்தில் தோன்றிடும் கரும்புள்ளி மற்றும் பருக்களை போக்கு உதவிடும். இது நம் உடலில் உள்ள நச்சுக்களையும் பாக்டீரியாவும் வெளியேற்ற உதவுகிறது. அதோடு முட்டைகோஸ் நம் சருமத்தை க்ளன்ஸ் செய்திடவும் உதவிடும்.

தலைமுடி : முட்டைகோஸில் அதிகப்படியாக விட்டமின் ஏ இருக்கிறது. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவிடும்.

முட்டைகோஸை வேக வைத்து, அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் இரண்டு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர் பேக்காக போட வேண்டும். சுமார் முப்பது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

தலைமுடி உதிர்வு : முட்டைகோஸ் சாற்றில் அதிகப்படியான சிலிக்கான் மற்றும் சல்ஃபர் இருக்கும் இவை தலைமுடியின் வளர்ச்சிக்கும் முடி உதிராமல் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. முட்டைகோஸை சாறெடுத்து தலையில் தடவ வேண்டும்.

இத்துடன் வெள்ளரிச்சாறையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடி வறட்சியிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

முட்டைகோஸ்… மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று. கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

உணவு உண்பதற்கு முன்பாக முட்டைகோஸ் உண்ணும் பழக்கம் ரோமானியர்களிடம் இருந்திருக்கிறது. ரோமானிய அரசப் பிரதிநிதிகளின் ஒருவராக இருந்த கேட்டோ, ‘முட்டைகோஸுக்கு பசியை தூண்டும் தன்மை உண்டு’ என தன்னுடைய குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்.

செவ்விந்தியர்கள் :

மாமிசம் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுவிடாமல் இருக்க, முட்டைகோஸ் இலை களில் அவற்றைச் சுற்றி வைத்து பாதுகாக்கும் வழக்கம் செவ்விந் தியர்களிடம் இருந்திருக்கிறது. உலகில் முதன் முதலில் அடை யாளம் காணப்பட்ட மலை முட்டைகோஸ், சுமார் 15 முதல் 20 அங்குல அகலமுடைய பெரிய இலைகளை கொண்ட தாம்.

கி.பி. 5-ம் நூற்றாண்டு துவக்கத்தில் சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளை எட்டிப்பார்த்த முட்டைகோஸ், அங்கேயும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. எகிப்து, லெபனான் என்று 11-ம் நூற்றாண்டுக்குள் ஒரு வலம் வந்துவிட்டாலும், இந்திய மக்களுக்கு அறிமுகமானது என்னவோ 1794-ம் ஆண்டில்தான். முட்டைகோஸ் பற்றி பரவிக்கிடந்த தவறான தகவலே இந்த தாமதத்துக்குக் காரணம்.

முதலிடம் :

தாமதமாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருந்தாலும் இன்று உலகளவில் முட்டைகோஸ் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாம்தான். இமாச்சல பிரதேசம், தமிழகம் இங்கெல்லாம் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்படுகிறது.

முட்டைகோஸில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் டி ஆகியவை அதிகமாக உள்ளதால் குடல் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் : முட்டைகோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி & கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.

.
மேலும்