கண் பார்வை குறைபாடு நீக்கும் எளிய டிப்ஸ்..

By saravanan

கண் பார்வை தெரிய அணியும் கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணின் பவர் குறைகிறது என அர்த்தம்.   முருங்கைப் பூவை பசும்பாலில் சேர்த்து காய்ச்சி இரு வேளையும் சாப்பிட்டால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

முருங்கைப் பூவை பொடியாக்கி தேனில் கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும். 

முருங்கை பூவை பாலில் வேகவைத்த பிறகு அதனை வடிகட்டி சாப்பிட்டால் கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

வாரம் 2 முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இப்படி செய்தால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

வயது முதிர்ந்த காலத்தில் தலைப்பாகை, செருப்பு அணிந்து நடக்க வேண்டும்.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்து சாப்பிட வேண்டும்.  இரவு நேரத்தில்  பால் சாதம் சாப்பிடுவது நல்லது. 

இரவின் உணவுக்கு பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. 

உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். 

பித்தத்தை அதிகரிக்கும் உணவை கைவிடவும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் வெளியே செல்லக் கூடாது.

தீப ஒளியை கண் அசைக்காமல் தினமும் 15 நிமிடம் பார்த்தால் மனதின் குழப்பங்கள் நீங்கும்.  கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்றவைகளும் சரியாகும்.   

.
மேலும்