இன்றைய ராசி பலன்கள் - (29-06-2024 வெள்ளிக் கிழமை)

By News Room

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, தொடர் வேலைகளால் உடல் அசதி, மனச்சோர்வு ஏற்படும்.மருத்துவ விரைய சிலவுகள் உண்டாகும்.பண தேவை அதிகமாகும். பிறரிடம் உதவி கேட்க தயக்கம் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப கௌரவத்தை உயர்த்த வழி கிடைக்கும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும். வியாபார விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளூவீர்கள்.

மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.உறவினர்களால் நற் செய்தி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

கடகம் கடக ராசி நண்பர்களே, யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிரச்னையை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும்.புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.

சிம்மம் சிம்ம ராசி நண்ர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். முக்கிய நபர்களை சந்திக்க நேரிடும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கன்னி கன்னி ராசி நண்பர்களே, எதிலும் அறிவுப் பூர்வமாகப் சிந்தித்து செயல்படவும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். புதுத் தொழில் யோகம் அமையும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.

துலாம் துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அன்பு, பாசம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். தூரத்து பயணங்கள் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.தொழில் வியாபாரத்தில் யுக்திகளை கையாண்டு பன் மடங்கு லாபத்தை காண முடியும்.

விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே,நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டிவரும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். நட்பு வழியில் நல்ல செய்தி உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரம் நல்ல லாபத்தை தரும்.

தனுசு தனுசு ராசி நண்பர்களே, குடும்ப நபர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கவும். மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். காலை 11:07 மணிவரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.

மகரம் மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். முன் கோபத்தை தவிற்க்கவும்.மனம் சந்தோஷம் படியான செய்தி வரும். .கொடுத்த பணம் வசூல் ஆகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.காலை 11:07 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

கும்பம் கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்க்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும் பணம் பொருள் சேர்க்கை உண்டாகும். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம் மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவர். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

.
மேலும்