மேஷம் மேஷ ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும்.நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரக்கூடும்.நண்பர்களிடம் கவனமாக பழகுங்கள். தேவையான பொருட்களை வாங்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, மனதில் இருந்து வந்த குழப்பம் நிலை நீங்கும். பண வரவு தாரளமாக இருக்கும்.பயணங்கள் திட்டமிட்டபடி அமையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, மனக்குழப்பம் நீஙாகும்.அக்கம் பக்க வீட்டாரின் ஆதரவு பெருகும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு வருவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடகம் கடக ராசி நண்பர்களே, குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மன வலிமை கூடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். பழைய வாகனத்தை மாற்ற வேண்டிவரும். கடன் சுமை ஓரளவு குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் இருப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
கன்னி கன்னி ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும் புத்துணர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம் துலாம் ராசி நண்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, சவாலான காரியங்களையும் சாதரணமாக முடிக்க முடியும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தனுசு தனுசு ராசி நண்பர்களே,பண விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
மகரம் மகர ராசி நண்பர்களே, பல நாட்களாக முடியாமல் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.உடல்நல குறைபாடுகள் தோன்றும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்
கும்பம் கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் தேவைற்ற வாக்குவாதங்கள் உருவாகும். பிறர் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீனம் மீன ராசி நண்பர்களே, சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். பெரிய மனிர்களின் சந்திப்பு நிகழும்.நட்பு வட்டாரத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.