கிடைத்த இடங்களில் இடைவெளி தராது அணைப்பது சுகம் எச்சில் முத்தங்களல்ல சுகம் எதிர்பாரா தருணங்களில் எவரும் பாராத படி பட்டென தருவதே சுகம் படுக்கையில் கிடப்பதல்ல சுகம் இரு நொடி என்றாலும் உன் மடிதனில் அமர்வதே சுகம் ஒட்டுத் துணியில்லாமல் ஒன்றிணைவதல்ல சிறு சிறு சல சலப்புகளுக்கும் உடையை சரி செய்து உணர்ச்சி பெருக்கில் ஒளிந்து ஒளிந்து ஒன்றிணைவதே சுகம் இத்தனை சுகங்களும் இல்லாமல் போனதடா உன் வீட்டில் இல்லாமல் தனியாய் நாம் வந்த பின்னே என்றும் இடம் தேடி என் பின்னே சுற்றி வந்தவன் இன்றோ என்னை தனிமையில் தவிக்கவிட்டு உன் நண்பர்களோடு சென்று விடுகிறாய் இரவு மட்டும் என்னோடு நீ என்று நேரத்தை ஒதுக்கியே ஒதுங்க இடம் தேடி அலைந்த நாட்களை மறந்தே. எதுவொன்றும் எப்போதோ எனும் போது தான் சுகம் என்பதை இப்போதே நான் உணர்ந்தேன் உன் ஸ்பரிசங்களின்றி பரிதவித்தபடி அன்புடன்❤️