பைரவர் கோயில் - இலுப்பைக்குடி.

By News Room

இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் தலம் - இலுப்பைக்குடி.

மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று. 

காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில்  கிட்டதட்ட ஒரு 6 கி மீ தொலைவில் (அரியக்குடி அருகில்) இலுப்பைக்குடியில் உள்ளது ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவில்.    

இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த ஸ்தலம் என்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. 

சித்தர்களில் ஒருவரான கொங்கணர் மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் கோயிலில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். 

அதனால் மாற்றூர் என்கிற மாத்தூர் இறைவன் பேயர் ஐநூற்றீஸ்வர்.

மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வேண்டி வேண்டினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். 

பைரவர் இங்கே ஜொலிக்கிறார்.ஒரு கையில் தங்க அட்சயபாத்திரம் ஏந்தி உள்ளார். 

இங்கே வேண்டிக் கொள்ள வீட்டில் ஸ்வர்ணம் பெருகும் என்கிறார்கள்.

இரண்டு நாய்களுடன் காட்சிதருகிறார். பைரவர் சன்னதியில் எந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கொஞ்சம் தவத்தில் ஆழ்ந்து சொல்ல சுழலும் ஒரு அலையினை உணரலாம்.

கோவிலின் அம்பாள் சன்னதிக்கு எதிரே ஒரு மிகப்பெரிய குளம் உள்ளது.

பைரவருக்கு அருகே ஒரு சிறிய பலகையில் நாய் உருவம் உள்ளது, நாய்கடி பெற்றவர்கள் இங்கு வந்து இந்த தூணை வலம் வந்து ,  குளத்தில் நீராடி பைரவரை வேண்ட, பைரவர் விஷதன்மையை முறிப்பதாக சொல்கிறார்கள்.

சுயம்பிரகாசேஸ்வரர், சிவன் மிக சிறியவடிவில் உள்ளார்.தெய்வீகம் நிறைந்த அலைகள் சூழ்ந்துள்ளது.

கோயிலின் முன் மண்டபத்தூணில் ஒரு அங்குல அளவிலான விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கிரீடம் அணிந்த நிலையில் உள்ளார். இறைவி சன்னதியின் எதிரில் உள்ள தூணில் வராகி உள்ளார்.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் விரைவில் நடைபெற, புத்திர தோஷங்கள் நீங்க இக்கோயிலில் உள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். 

சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும், விசேஷ பூஜைகள் செய்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

.
மேலும்