உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். - ௐ ஶ்ரீ சாய் ராம்

By News Room

மரங்கள் வளர்ந்து இலைகளால் காய்களால் கனிகளால் பூக்களால் இருக்கும் மரத்தை ரசிக்க யாருக்கு தான்  பிடிக்காமல் இருக்கும். ஆனால் அந்த நிலை வருவதற்குள் அந்த மரம் படும் பாடு தன்னையும் காத்து தன்னை நம்பி நிழல் தேடி வரும்  அனைவரையும் காத்து, 

தன்மேல் அடைக்கலமாய் தங்குவதற்கு வரும் உயிரினங்களையும் காத்து மிக பெரிய நிலைகளை கடந்து வருகிறது. அப்படி இருக்கையில் மனிதன் தன் நிலையில் வெற்றிகரமாய் நின்றிட  எதிர்க்கொள்ள வேண்டியதும்  கடினமாக தான் இருக்கும்.

சோதனையை தாங்கி நகர்ந்து வரும் அந்த சிறிது நேர போராட்டம் தான் உன்னை எப்படி என்று உனக்கே தீர்மானித்து காட்டும். ஒரு தாய் தன் பிரசவ வலியின் போராட்டத்தை தாங்கிய அந்த நிமிடங்களுக்கு  பிறகு தன் உயிருக்கு மேலான குழந்தையை ஈன்று எடுக்கிறாள்.

தந்தை எத்தனையோ போராட்டங்கள் தன் குடும்பத்தை தாங்குவதற்கு இதை போல ஓவ்வொரு கட்டத்திலும் போராட்டம் இருக்க தான் செய்யும். அப்பா அப்படியென்றால் வாழ்க்கை என்றாலே போராட்டம் தானா என்றால் இல்லை ஆனால் வாழ்க்கை என்றும் ஒரு கோட்டில் செல்லாது.

அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்தும் செல்லும நிலை பெரிது அதற்கான சூழல் மாறுப்படும் அது தான் போராட்டமான நேரம். போராட்டங்களில் தான் வா்ழ்க்கையை வாழ கற்றுக் கொடுக்கும் அதை தான் உன் அப்பா போதித்து வருகிறேன் உன்னிடத்தில்.

வெற்றி பெறுவாய் இந்த போராட்டத்தில் இந்த போராட்டம் வெற்றி அடைந்தால் அடுத்து போராட்டம் இல்லையா என்று தானே உன் கேள்வி. உன்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு எப்பொழுதெல்லாம் செல்கிறதோ அப்போது போராட்டம் தொடரும்.

இந்த போராட்டத்தின் வெற்றி என்பது மிக விஷேமானது எதனால் என்றால் உன் வாழ்க்கைகான முதல் தளமான போராட்டம் தான். நீ இப்போது எதிர்க்கொள்வது அதில் வெற்றி பெற்றால் பக்குவம் என்ற பொக்கிஷமாக மாறுவாய் அதனால்தான் கூறுகிறேன்.

அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்.

.
மேலும்