குலதெய்வ வழிபாடு சிறப்பு

By Senthil

ஒவ்வொரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே ‘குலதெய்வம்’ என அழைக்கப்படுகிறது. 

பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே. குலம் காக்கும் தெய்வமாக அது போற்றப்படுகிறது.

'நாள் செய்யாததைக் கோள் செய்யும். கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும்' என்பது பழமொழி. நடக்காத காரியங்களையும் நடத்தித் தரும் வலிமை குலதெய்வங்களுக்கு உண்டு. பெற்றவர்கள் எப்படிக் குழந்தைகளைத் தங்கள் கண்களுக்குள் வைத்துக் காக்கிறார்களோ அப்படிக் குலதெய்வமும் காக்கும்.

ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தங்களது குடும்பத்தினருடன் குளதெய்வ கோயில்களுக்கு சென்று வந்தால் நல்லது.

.
மேலும்